நாயகன் கமல் மாதிரி பேசுங்க...கார்த்தியை கலாய்த்த டைரக்டர்

சென்னை : டைரக்டர் கார்த்தி நடித்துள்ள படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன. பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் என அத்தனை படங்களுமே அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களாக இருந்து வருகின்றன.

Recommended Video

நாயகன் கமல் மாதிரி பேசுங்க...கார்த்தியை கலாய்த்த டைரக்டர்

இதில் கொரோனா, லாக்டவுன் போன்ற காரணங்களால் பல தடைகளுக்கு பிறகு வெளிவர உள்ள படம் சர்தார். இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ். மித்திரன் இந்த படத்தை இயக்கி உள்ளார்.இந்த படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.

சிறுத்தை படத்திற்கு பிறகு போலீஸ், இரட்டை வேடம் என ஒரே நேரத்தில் கார்த்தி அவதாரம் எடுத்துள்ள படம். இதில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அத்துடன் தந்தை - மகன் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் படத்தில் கார்த்தி இடம் பெறும் காட்சிகளுக்கான ஷூட்டிங் திங்கள்கிழமையுடன் முடிவடைந்துள்ளது.அதைத் தொடர்ந்து சில காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை இயக்குநர் பி.எஸ். மித்ரன் தொடங்கியுள்ளார்.டப்பிங் பணிகளின் போது கார்த்தி மற்றும் பி.எஸ்.மித்திரன் பேசிக்கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.

Karthi completed Sardar dubbing works

அதில், "நாலு பேருக்கு நல்லது பண்ணாலும் அதை நாற்பதாயிரம் பேருக்கு தெரியிற மாதிரி பண்ணனும்" என்று கார்த்தி பேசும் வசனம் இடம் பெற்றுள்ளது.இந்த வசனத்தை கார்த்தி முதலில் சாதாரணமாக பேச, இதை பார்த்துக் கொண்டிருந்த மித்ரன், நாயகன் கமல் சார் மாதிரி பேசுங்க என சொல்கிறார்.

இதைக் கேட்டு முதலில் ஷாக் ஆகும் கார்த்தி, கமல் சார் மாதிரி தான என சொல்லி விட்டு, வேலு நாயக்கர் ஸ்டைலில் அந்த வசனத்தை பேசிக் காட்டுகிறார். இந்த வீடியோ ரசிகர்களை பெரிதும் கவர்ந்து, லைக்குகளை அள்ளி வருகிறது. இருந்தாலும் கமலை கலாய்ப்பது போல் இருப்பதாக சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சர்தார் படத்தை தீபாவளி பண்டிகைக்கு வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.அதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துள்ளனர். சர்தார் படத்தில் கார்த்தி உடன் ராஷி கண்ணா, சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தில் சிம்ரன் நீண்ட இடைவேளைக்கு பிறகு வில்லி ரோலில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.இந்த படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X