»   »  கடும் போராட்டத்துக்குப் பின்...'காஷ்மோரா'வை நிறைவு செய்த கார்த்தி!

கடும் போராட்டத்துக்குப் பின்...'காஷ்மோரா'வை நிறைவு செய்த கார்த்தி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காஷ்மோரா படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாக நடிகர் கார்த்தி அறிவித்திருக்கிறார்.

கார்த்தி, ஸ்ரீதிவ்யா, நயன்தாரா, மனிஷா யாதவ் நடிப்பில் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' புகழ் கோகுல் இயக்கிய காஷ்மோரா ஒருவழியாக தற்போது முடிவுக்கு வந்துள்ளது.


சிறுத்தை படத்துக்குப்பின் கார்த்தி ஒன்றுக்கும் மேற்பட்ட(3) வேடங்களில் நடிக்க ஒப்புக் கொண்ட படம் காஷ்மோரா. மிகவும் ஆரவாரமாகத் தொடங்கப்பட்ட இப்படம் பட்ஜெட் காரணமாக பல மாதங்கள் கிடப்பில் போடப்பட்டது.


Karthi's Kaashmora Shooting Completed

இந்நிலையில் பல்வேறு சமரசங்களுக்குப் பின் மீண்டும் தொடங்கப்பட்ட காஷ்மோரா படப்பிடிப்பு முழுவதும் முடிவுக்கு வந்துள்ளது. தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை படக்குழு தொடங்கவுள்ளது.


இதுகுறித்து நடிகர் கார்த்தி '' காஷ்மோரா படப்பிடிப்பு முடிவுக்கு வருமா? என்று பயந்தோம்.ஆனால் ட்ரீம் வாரியர்ஸ் அன்பு அதனை நடத்திக் காட்டிவிட்டார்.


படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்து விட்டது. ஓம் பிரகாஷ் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது நன்றிகள்'' என்று தெரிவித்திருக்கிறார்.


சுமார் 60 கோடிகளுக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் 'காஷ்மோரா' படத்தின் பர்ஸ்ட் லுக், விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


'காஷ்மோரா' படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கவிருக்கும் புதிய படத்தில் கார்த்தி நடிக்கவிருக்கிறார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil