»   »  பாண்டி மகனுடன் கார்த்திகா!

பாண்டி மகனுடன் கார்த்திகா!

Subscribe to Oneindia Tamil

பாண்டியராஜனின் மகன் பிருத்விக்கு அடுத்து ஒரு படம் கிடைத்துள்ளது. இதில் அவருக்கு ஜோடி போடுகிறார் தூத்துக்குடி நாயகி கார்த்திகா.

பாண்டியராஜன் கடந்த ஆண்டு தனது மகன் பிருத்வி(ராஜன்)யை நாயகனாக்கினார். கை வந்த கலை என்ற அப்படத்தில் பாண்டியராஜனும், பிருத்வியும் இணைந்து அசத்தினர். ஆனால், பையனிடம் ஹீரோவுக்கான லட்சணம் ரொம்ப கம்பி என்பதால் யாரையும் கவரவில்லை.

படம் முழுக்க காமெடி இருந்தும் பிருத்வியின் நடிப்பில் மெருகும் போதுமானதாக இல்லாததால், மெழுகு போல படம் உருகி காணாமல் போனது. இருந்தாலும் சற்றே மெருகேற்றிக் கொண்டால் காமெடி நடிப்பில் கலக்கலாம் என பிருத்விக்கு அட்வைஸ் வந்து குவிந்தது.

முதல் படத்திற்குப் பிறகு புதுப் படம் எதுவும் கிடைக்காமல் இருந்து வந்த பிருத்விக்கு புதிதாக ஒரு படம் வந்துள்ளது. நாளைய பொழுதும் உன்னோடு என அப்படத்துக்குப் பெயரிட்டுள்ளனர்.

பி.வாசுவிடம் உதவியாளராக இருந்த மூர்த்தி கண்ணன் இயக்குகிறார். பிருத்விக்கு ஜோடியாக கார்த்திகா நடிக்கிறார். கிட்டத்தட்ட பிருத்வி நிலைதான் கார்த்திகாவுக்கும். முதல் படம் சுமாராக ஓடியும் கூட கார்த்திகாவுக்கு நிறையப் படங்கள் வந்து விடவில்லை.

பிறகு என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் கார்த்திகா. அதுவும் எப்போது முடியும், எப்போது வெளி வரும் என்று தெரியவில்லை. இந்த நிலையில்தான் இந்தப் படவாய்ப்பு வந்தது.

முதல் முறையாக இப்படத்தில் கிளாமரிலும் புகுந்து விளையாடவுள்ளாராம் கார்த்திகா.

படத்தில் இன்னொரு பயங்கரமும் உண்டு. அதாவது பிருத்வியின் சகோதரர்களான பல்லவராஜன், பிரேமராஜன் ஆகியோரும் படத்தில் நடிக்கிறார்களாம். அண்ணன், தம்பி மூன்று பேரும் சேர்ந்து அதகளப்படுத்தப் போகும் இப்படத்தில் லிவிங்ஸ்டனும் உண்டு.

சரி, படத்தோட கதை என்னண்ணே என்று இயக்குநர் மூர்த்தி கண்ணனிடம் கேட்டபோது, அதாவது 12வது படிக்கும் ஒரு பையனுக்கும், அவனுடன் படிக்கும் பொண்ணுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு காதலாகிறது. கடைசியில் அது என்னவாகிறது என்பதுதான் கதை என்றார்.

ரொம்ப ரொம்ப புது கதை தான்...

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil