»   »  மறுக்கும் கார்த்திகா!

மறுக்கும் கார்த்திகா!

Subscribe to Oneindia Tamil

கண்ணை உறுத்தும்படியான கிளாமர் நடிக்க மாட்டேன் என்ற தனது கொள்கையில் படு பிடிவாதமாக இருக்கிறார் கார்த்திகா. சமீபத்தில் இவரது பிடிவாதத்தால் ஒரு காட்சியைப் படமாக்க திணறிப் போய் விட்டார்களாம்.

தூத்துக்குடி மூலம் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த சாத்துக்குடிதான் கார்த்திகா. கருவாப்பையா பாட்டு மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகி விட்ட கார்த்திகா அதன் பின்னர் பிறகு படத்தில் நடித்தார்.

கண்ணை உறுத்தும்படியான கவர்ச்சிக்கு பெரிய கும்பிடு போடும் கார்த்திகா, புதுமுகமாக இருந்தாலும் கூட, இயக்குநர்கள் கவர்ச்சி கேட்கும்போது முடியவே முடியாது என்று தில்லாக கூறி விடுகிறாராம்.

பிறகு படத்தில் கூட ஒரு காட்சியில் கிளாமர் காட்டுமாறு கேட்டுள்ளனர். ஆனால் கார்த்திகா முடியவே முடியாது என்று கூறி விட்டாராம். கடுமையாக கெஞ்சியும் கூட கார்த்திகா இறங்கி வராததால், கடுப்பாகிப் போன இயக்குநர், கார்த்திகாவை வைத்து ஒரு பாட்டை எடுத்தார்.

அந்தப் பாட்டில், எண்ணை வழியும் முகத்துடன், படு குளோசப்பில் கார்த்திகாவை காட்டியிருப்பார்கள். கிட்டத்தட்ட பேய் கணக்காக இருப்பார் கார்த்திகா.

அந்தப் பாட்டைப் பார்த்த பலரும் கார்த்திகாவிடம் ஏன் இப்படிப் போய் நடித்தாய் என்று கேட்டார்களாம். எல்லாம் கவர்ச்சியாக நடிக்க மறுத்ததால் வந்த வினை என்று புலம்பியுள்ளார் கார்த்திகா.

கடுமையான போட்டி நிலவுகிற போதிலும் கூட ஓவர் கிளாமருக்கு ஸாரி சொல்லி விடுகிறார் கார்த்திகா. சமீபத்தில் பாண்டியராஜன் மகன் ப்ருத்வி ஜோடியாக நடிக்கும் நாளைய பொழுதும் உன்னோடு படத்தின் படப்பிடிப்பு மாயவரத்தில் நடந்தது.

ராத்திரியில் அந்தக் காட்சியைப் படமாக்கினர். அந்தக் காட்சியில் ப்ருத்விக்கும், கார்த்திகாவுக்கும் வாக்குவாதம் வரும். வாக்குவாதத்தின் உச்சத்தில், உனக்கு என் உடம்புதானே வேண்டும், இந்தா எடுத்துக்கோ என்று கூறி விட்டு சேலை முந்தானையை எடுத்து வீச வேண்டும்.

இந்தக் காட்சியைக் கேட்ட கார்த்திகா, சாரி சார் இப்படியெல்லாம் என்னால் நடிக்க முடியாது என்று கூறி விட்டாராம். ஷாக் ஆகிப் போன இயக்குநர் மூர்த்தி கண்ணன், இல்லை கார்த்திகா, இதெல்லாம் கவர்ச்சியே இல்லை. இது சாதாரணமான காட்சிதான் என்று சமாதானப்படுத்திப் பார்த்தார். ஆனால் முடியவே முடியாது என்று பிடிவாதமாக கூறியுள்ளார் கார்த்திகா.

இதனால் ஷூட்டிங்கை அப்போதைக்கு முடித்து விட்டு மறு நாள் காலையில் கார்த்திகாவை மீண்டும் சமாதானப்படுத்தியுள்ளார் மூர்த்தி கண்ணன். கடைசியில் சிறு மாற்றத்துடன் காட்சிக்கு ஓ.கே. சொன்னாராம் கார்த்திகா.

ஒரு வேளை ராத்திரி வேளை என்பதால் நடிக்க மறுத்திருப்பாரோ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil