»   »  நான் கடவுள்: கார்த்திகாவும் நீக்கம்!

நான் கடவுள்: கார்த்திகாவும் நீக்கம்!

Subscribe to Oneindia Tamil

நான் கடவுள் படத்திலிருந்து கார்த்திகாவும் நீக்கப்பட்டுள்ளாராம். அடுத்த நாயகியைத் தேட ஆரம்பித்துள்ளார் இயக்குநர் பாலா.

பாலாவின் நான் கடவுள் ஆரம்பத்திலிருந்தே சின்னச் சின்ன தடங்கல்களுடன் வளர்ந்து வருகிறது. முதலில் அஜீத் நாயகனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் திடீரென பிரச்சினை ஏற்பட்டு, அஜீத் தூக்கப்பட்டார். ஆர்யா நாயகனாக்கப்பட்டார்.

பின்னர் நாயகியை மாற்றினார் பாலா. முதலில் அறிவிக்கப்பட்ட பாவனாவின் நடிப்பில் பாலாவுக்கு திருப்தி வரவில்லை. இதனால் முதல் ஷெட்யூலோடு அனுப்பப்பட்டு விட்டார் பாவனா.

பிறகு கார்த்திகாவை நாயகியாக்கினார். பெரியகுளத்தில் முகாமிட்டு படப்பிடிப்பை முடுக்கி விட்டார் பாலா. படப்பிடிப்பும் படு வேகமாக நடந்து வருகிறது.

சமீபத்தில் கார்த்திகாவை பிச்சைக்காரி வேடமிட்டு பெரியகுளம் தெருக்களில் பிச்சை எடுக்க வைத்து படமாக்கினார் பாலா. கார்த்திகாவின் நடிப்பு பாலாவைக் கவர்ந்து விட்டதாகவும், இயல்பாக அவர் நடிப்பதாகவும் பாலா சந்தோஷப்பட்டதாக செய்திகளும் வெளியாகின.

இந்த நிலையில் திடீரென படத்திலிருந்து கார்த்திகாவையும் தூக்கி விட்டாராம் பாலா. சமீபத்தில் கார்த்திகாவுக்கு டைபாய்டு காய்ச்சல் வந்தது. இதையடுத்து சென்னைக்குக் கிளம்பினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார்.

கார்த்திகா போனாலும் கூட, ஆர்யா மற்றும் பிற கலைஞர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை தொடர்ந்து எடுத்து முடித்தார் பாலா. பிறகு எடுத்தவரை வந்த காட்சிகளைப் போட்டுப் பார்த்துள்ளார். அப்போது கார்த்திகா சம்பந்தப்பட்ட காட்சிகள் அவருக்கு திருப்தியாக இல்லை.

இதையடுத்து கார்த்திகாவை நீக்கி விட்டாராம் பாலா. புதிதாக வேறு ஹீரோயினைப் போட தீர்மானித்துள்ளார் பாலா. கேரளத்தைச் சேர்ந்த பார்வதி உள்ளிட்ட சிலருடன் பேசி வருகிறாராம்.

கடவுளின் ஜோடி யாரோ?, அந்த கடவுளுக்கே வெளிச்சம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil