காசேதான் கடவுளடா ரீமேக்…. அசுரவேகத்தில் முடிந்த படப்பிடிப்பு !
சென்னை : காசேதான் கடவுளடா ' ரீமேக் படத்தின் படப்பிடிப்பு 35 நாளில் அசுரவேகத்தில் நடந்து முடிந்துள்ளது.
மிர்ச்சி சிவா, யோகி பாவு, பிரியா ஆனந்த், குக் வித் கோமாளி புகழ், சிவாங்கி, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மசாலா பிக்ஸ் மற்றும் MKRP புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை ஆர் கண்ணன் இயக்கி உள்ளார்.

நகைச்சுவை படம்
1972ம் ஆண்டு வெளியான நகைச்சுவைத் திரைப்படம் தான் காசேதான் கடவுளடா. இத்திரைப்படத்தில் லட்சுமி, மனோரமா, முத்துராமன், தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாநத், வெண்ணிற ஆடை மூர்த்தி என பல நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசை
இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற அனைத்துப்பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. குறிப்பாக ஜம்புலிங்கமே ஜடாதரா என்ற பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்ட பாடலாக இருந்தது.

காசேதான் கடவுளடா
இந்நிலையில், காசேதான் கடவுளடா திரைப்படத்தை ரீமேக் செய்யும் முயற்சியை இயக்குனர் ஆர் கண்ணன் கையில் எடுத்துள்ளார். முத்துராமன் கதாபாத்திரத்தில் மிர்ச்சி சிவாவும், தேங்காய் சீனிவாசன் கதாபாத்திரத்தில் யோகி பாவும், மனோரமா கேரக்டரில் ஊர்வசியும் நடிக்கின்றனர். மேலும், பிரியா ஆனந்த், குக் வித் கோமாளி புகழ், சிவாங்கி, கருணாகரன், தலைவாசல் விஜய், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்தது
ஜூலை 16ஆம் தேதி சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இந்தச் சூழலில் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நடைபெற்று வந்த படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்துள்ளது. டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து விரைவில் திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரீமேக்
ரஜினிகாந்த் நடித்து வெற்றிப்பெற்ற தில்லு முல்லு ரீமேக்கில் மிர்ச்சி சிவா நடித்திருந்தார். இப்படத்தை பத்ரி இயக்கினார், எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைச்ச நியூ லுக்கிற்காக யுவன் படம் முழுக்க உடன் இருந்தார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், கோவை சரளா, சூரி,சந்தானம் ஆகியோர் நடித்திருந்தனர்.


Click it and Unblock the Notifications











