»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

விஜய் நடிக்கும் திருமலையில் படத்தில் கிரண் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடியிருக்கிறார்.

கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்து வரும் திருமலையில் கிரண் சிங்கிள் பாட்டுக்கு பயங்கரகவர்ச்சி ஆட்டம் போட்டிருக்கிறார். பூம்பூம் மாட்டுக்கார வேடத்தில் வந்து ஆடியிருக்கும் கிரணின் அட்டகாசகவர்ச்சி, படத்தின் ஹைலைட்டுகளில் ஒன்றாக இருக்குமாம்.

விஜய்யும், கிரணும் இந்தப் பாடல் காட்சியில் பின்னி எடுத்திருக்கிறார்களாம். பாடலை கபிலன் எழுதியிருக்கிறார்.வித்யாசாகர் இசை அமைத்திருக்கிறார்.

வாடியம்மா.. ஜக்கம்மா.. என்று ஆரம்பித்து குண்டக்க மண்டக்க போகிறதாம் இந்த குஜால் பாட்டு.

ஏற்கனவே சரத்குமாரின் அரசு படத்தில் ஒரு படத்துக்கு ஆடினார் கிரண். அதற்கு ரூ. 5 லட்சம் வரை காசுவாங்கினார். இப்போது திருமலைக்கு மேலும் 2 லகரங்கள் கூடுதலாகவே வாங்கியிருக்கிறாராம்.

விஜய்யின் படத்தில் முன்பு சரக்கு வச்சுருக்கேன்.. இறக்கி வச்சுருக்கேன் பாட்டுக்கு மீனா ஆடினார். அந்தடப்பாங்குத்து பாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் அவரையே மீண்டும் போடலாம் அல்லதுசிம்ரனைப் போடலாம் என்று விஜய் சொன்னாராம். சிம்ரன் ஓ.கே. என்று பாலசந்தரும் சொல்லிவிட்டார்.

ஆனால், கிரண் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு இந்த சான்ஸைக் கைப்பற்றிவிட்டாராம். அவரது கெஞ்சல் மற்றும்கொஞ்சல் காரணமாக இயக்குனர் தரப்பிலிருந்து அவருக்கே ஓட்டு விழுந்ததாம். இதனால் விஜய் மற்றும்பாலசந்தரிடம் பேசி கிரணுக்கே சான்ஸ் வாங்கித் தந்தாராம் இயக்குனர்.

முன்பெல்லாம் ஹீரோயின் சான்ஸ் பிடிக்க போட்டி நடக்கும். இப்போது சிங்கிள் பாட்டுக்கு டான்ஸ் ஆட கடும்போட்டி நடக்கிறது. அதிலும் இந்த விஷயத்தில் சிம்ரன், கிரண் இடையே குடுமிப்படி சண்டையே நடக்கஆரம்பித்துள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil