»   »  "அ.. ஆ.." ஆனது "பி.எஃப்"!

"அ.. ஆ.." ஆனது "பி.எஃப்"!

Subscribe to Oneindia Tamil

தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் அன்பான வேண்டுகோளை ஏற்று, தனது படத்தின் பெயரை "அ.. ஆ.." என மாற்றியுள்ளார் இயக்குனர்எஸ்.ஜே.சூர்யா.

நிலா என்ற சின்ன சிம்ரனை ஹீரோயினாக்கி, பி.எஃப் என்ற பெயரில் படத்தை தயாரித்து, இயக்கி வரும் சூர்யாவுக்கு கடும் எதிர்ப்புஎழுந்தது.

ஆனால், இது பெஸ்ட் பிரண்ட் என்பதன் சுருக்கம்தான் என பெயர்க் காரணம் கூறிக் கொண்டிருந்தார் சூர்யா.

இந் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் சூட்டிங் ஸ்பாட்டுக்கே புறப்பட்டுப் போய் சூர்யாவுடன் அன்பாக பேசிவிட்டுத் திரும்பினர்.

படத்திற்குப் பிரச்சினை வருவதை உணர்ந்த வினியோகஸ்தர்களும், சூர்யாவை அணுகி படத்தின் பெயரை மாற்றி விடுமாறுவலியுறுத்தினர். யாருக்கும் பணியாத சூர்யா, வினியோகஸ்தர்களின் கோரிக்கையை புறம் தள்ள முடியவில்லை.

மேலும் அவருடன் பாரதிராஜாவும் தொலைபேசியில் பேசி படப் பெயரை மாற்றுமாறு கோரியதாக சொல்கிறார்கள்.

இதையடுத்து தனது படத்தின் பெயரை தமிழில் மாற்றப் போவதாக அவர் அறிவித்தார்.

படத்துக்கு நல்ல பெயராக சொல்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசும் அறிவித்தார். நூற்றுக்கணக்கில் பெயர்கள் வந்து குவிந்தாலும்சூர்யாவுக்கு எதுவும் பிடிக்கவில்லையாம்.

இந் நிலையில் மண்டையைப் போட்டு கசக்கி, படத்திற்கு "அ.. ஆ.." என சூர்யா பெயர் வைத்துள்ளார்.

தமிழ் எழுத்துக்களின் முதல் இரண்டு எழுத்துக்களை தனது புதிய படத்தின் பெயராக அவர் அறிவித்துள்ளார். இருப்பினும், "அ.. ஆ.."என்பது எதைக் குறிக்கிறது என்பதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.

அ..ஆ... என்பதன் ஒலியைப் பார்க்கும்போது இந்தத் தலைப்புக்கும் வில்லங்கமான அர்த்தம் ஏதும் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.காரணம்.. படத்துக்கு தலைப்பு வைத்தது சூர்யாவாச்சே.


அடுத்து கள்வனின் காதலி என்ற நல்ல தமிழ் தலைப்பிலான படத்தில் நடிக்கும் சூர்யா, அதை முடித்துவிட்டு திருவிழா என்ற படத்தில்நடிக்கப் போகிறார். இவை இரண்டும் வெளிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவிழாவைத் தயாரிக்கப் போவது யார் தெரியுமா? கலைப்புலி எஸ்.தாணு. இயக்கப் போவது ரத்னகுமார். திருநெல்வேலியை மையமாகவைத்து எடுக்கப் போகிறார்களாம். அல்வா பார்ட்டியான எஸ்.ஜே.சூர்யாவின் சொந்த ஊரும் அது தான்.


Read more about: aah, change, kj surya, surya, title
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil