»   »  குருவி 'வேட்டை' ஆரம்பம்!

குருவி 'வேட்டை' ஆரம்பம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil


இளையதளபதி விஜய், திரிஷா நடிப்பில், அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி தயாரிப்பில், தரணியின் இயக்கத்தில் அதிரடியாக உருவாகும் குருவி படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்து விட்டது.


நல்ல நாள் என்பதால் வியாழக்கிழமையன்று படத்துக்குப் பூஜை போட்டு சில காட்சிகளை சுட்டுள்ளனர். இப்படத்தில் திரிஷாவுக்குப் பதில் ஹீரோயினாக நயனதாரா, வித்யா பாலன் என பலரின் பெயர்கள் அலசப்பட்டன. கடைசியில் திரிஷாவையே வைத்துக் கொள்வது விஜய் தீர்மானித்ததால் இப்போது விஜய்யின் நாயகியாக நடிப்பவர் திரிஷாதான்.

விஜய்யுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் விவேக் இணைகிறார். காமெடியில் விஜய்யுடன் இணைந்து ராவடி செய்யப் போகிறாராம்.

படத்தின் காமெடி போர்ஷனையும் விவேக்கே வடிவமைத்துள்ளாராம். தரணியும், விவேக்கும் கடைசியாக தூள் படத்தில் இணைந்தனர். அது சூப்பர் ஹிட் ஆனது போல், குருவி பட காமெடியும் கலக்கலாக அமையும் என்ற நம்பிக்கையில் உள்ளது குருவி யூனிட்.

வேட்டையை ஆரம்பித்து விட்டனர். அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி, தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று ரசிகர்களுக்கு குருவியைப் 'பரிமாறத்' திட்டமிட்டுள்ளனராம்.

நல்லா சூடா பரிமாறுங்கப்போய்!

Read more about: hunting kuruvi udayanidhi

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil