»   »  குஷ்பு சுகவீனம் - மருத்துவமனையில் அனுமதி

குஷ்பு சுகவீனம் - மருத்துவமனையில் அனுமதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை குஷ்புவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குஷ்பு சினிமாவில் நடிப்பதைப் போலவே படத் தயாரிப்பு, டிவி தொடர்களில் நடிப்பது என பிசியாக உள்ளார். சமீபத்தில் அவர் நடித்த படம் வேகம். இதுதவிர ஜாக்பாட் டிவி கேம் ஷோ படப்பிடிப்பிலும் பிசியாக இருந்து வருகிறார்.

தற்போது விரைவில் வரவுள்ள கலைஞர் டிவியில், ஒளிபரப்பாகவுள்ள நம்ம குடும்பம் தொடரில் குஷ்பு நடிக்கிறார். இந்தத் தொடரின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்தபோது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனைக்கு குஷ்பு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், குறைந்த ரத்த அழுத்தம் காரணமாகவே மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

குஷ்புவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட தகவல் அவரது கணவரான இயக்குநர், நடிகர் சுந்தர்.சி.க்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர் பொறுக்கி படப்பிடிப்புக்காக காரைக்குடியில் இருந்தார். தகவல் அறிந்ததும் மதுரைக்கு வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்து மனைவியைப் பார்த்தார்.

குஷ்பு சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன் பின்னரே தனது பணிகளில் மீண்டும் அவர் ஈடுபடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil