»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

குஷ்பு தயாரிக்கும் படத்தில் ரீமா சென் கதாநாயகியாக நடிக்கிறார்

பெரும்பாலும் கதாநாயகிகள் சொந்தப் படம் எடுக்கும்போது, என்ன ஆனாலும் சரி அவர்கள் தான்கதாநாயகியாக நடிப்பார்கள். ஆனால் குஷ்பு தனது சொந்தப் படத்தில் ரீமா சென்னைக் கதாநாயகியாக்கிஉள்ளார். இன்னும் கதாநாயகியாக நடித்து ரசிகர்களைச் சோதிக்க வேண்டாம் என்று நினைத்து விட்டார் போலும்.

அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் என்ற பெயரில் குஷ்பு தயாரிக்கும் படம் கிரி. இந்தப் படத்தை இயக்குபவர்அவரது கணவர் சுந்தர்.சி.

சுந்தர்.சி என்றாலே மினிமம் கியாரண்டி படங்களைத் தருபவர் என்று நல்ல பெயர் விநியோகஸ்தர்கள் மத்தியில்உண்டு. இவரது படங்களில் நகைச்சுவை தான் பிரதானம். நகைச்சுவை நடிகர்கள் தான் கதாநாயகர்களாகஇருப்பார்கள். ஹீரோ வெறும் டம்மிதான்.

கடைசியாக சுந்தர்.சி இயக்கி, வெளிவந்த படமான வின்னர் படத்தில் வடிவேலு பேசப்பட்ட அளவுக்கு பிரசாந்த்பேசப்படவில்லை. வடிவேலுவின் அளப்பற காமெடியால் படம் பரவலான வசூலைப் பெற்றது. அதனால்தானோஎன்னவோ, இந்தப் படத்திலும் முக்கிய வேடத்தில் வடிவேலு நடிக்கிறார்.

உப்புக்குச் சப்பாணியாகவாவது கதாநாயகனாக ஒருவர் வேண்டுமே! தேசபக்தி நடிகர் அர்ஜூனை ஒப்பந்தம்செய்துள்ளார்கள். அர்ஜூனுக்கு ரீமா சென் ஒருவர் மட்டும் ஜோடியில்லை. மும்பையைச் சேர்ந்த இன்னொருபுதுமுகமும் இருக்கிறார்.

ஜோதிகாவும், த்ரிஷாவும் நடிக்க மறுக்கும் படங்களை எல்லாம் ரீமா சென் கைப்பற்றி விடுகிறார். அதற்காக ஒருமீடியேட்டரை மாதச் சம்பளம் கொடுத்து பிடித்து வைத்திருக்கிறார். அப்படி கைப்பற்றிய படம்தான் கிரியாகும்.

கிரி படத்தில் திலகன், சலீம் கெளஸ், பிரமிட் நடராஜன், ஷகீலா உட்பட பலர் நடிக்கிறார்கள். சென்னை,பொள்ளாச்சி, கொச்சி, ஆலப்புழா, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. ஆகஸ்ட்15ம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

என்னதான் சுந்தர்.சி மீது நம்பிக்கை இருந்தாலும், சொந்தப் படம் எடுத்து சொத்தை இழந்த ரோஜா, தேவயானி,ரம்பா ஆகியோரிடம் குஷ்பு ஆலோசனை கேட்டுக் கொள்வது நல்லது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil