»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

ஜெய் படம் கைவிட்டாலும் தனது முயற்சியில் சற்றும் மனம் தளராது அடுத்த படத்தில் நடிக்க ரெடியாகி விட்டார்பிரசாந்த்.

ஜெய் படத்தைத் தயாரித்த அவரது அப்பா தியாகராஜனே அடுத்த படத்தையும் தயாரிக்கிறார். அத்தோடுநிற்காமல் இயக்கவும் போகிறார்.

ஆணழகன் படத்துக்குப் பிறகு பிரசாந்த் நடிக்கும் படத்தை தியாகராஜன்இயக்குகிறார்.

பிரசாந்த் நடிக்கவுள்ள இந்தப் புதிய படத்திற்கு ஷாக் (திருமாவளவன் கவனிக்கவும்) என்று பெயரிட்டுள்ளார்கள்.

சஸ்பென்ஸ், திரில்லர் படமாக இது இருக்குமாம்.

இதுவரை பிரசாந்த் இப்படி ஒரு ரோல் பண்ணியதில்லை என்றுஎல்லோரும் பாராட்டும் விதமாக (இனிமேல் இப்படிப்பட்ட ரோலை பண்ணாதீங்கோ என்று எல்லோரும் திட்டாதஅளவுக்கு இருந்தால் சரித்தான்!) பிரசாந்த்தின் ரோல் இருக்குமாம்.

லைலா இதில் ஜோடி சேருகிறார். ஏற்கனவே இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்த பார்த்தேன் ரசித்தேன் படு பயங்கரஹிட் ஆனதால், அந்த சென்டிமென்ட்டில் லைலாவை ஷாக்கில் பிரசாந்த்திற்கு ஜோடி சேர்த்துள்ளார்கள். அதோடுமற்றொரு கதாநாயகியாக ஆஷின் நடிக்கிறார்.

குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், சரிதா, ரகுவரன், பசுபதி ஆகிய பிரபலங்களும் படத்தில் உள்ளனர்.

மேலும்தியாகராஜன் புதிய கெட்டப்பில் காவல்துறை அதிகாரியாக கலக்கவுள்ளார்.

சலீம் சுலைமான் என்ற புதுமுகம் திகில் இசையைக் கொடுக்கவுள்ளார். பாட்டுக்கள் இல்லாமல் எடுக்கலாமா என்றும்யோசித்து வருகிறார்களாம். லண்டனில் பின்னணி இசையை அமைக்க முடிவெடுத்துள்ளார்கள்.

இந்தியில் வெளியாகி சக்கை போடு போட்ட ராம் கோபால் வர்மாவின் "பூத்" தான் "ஷாக்" ஆக உருமாறுகிறது.மேலும் இந்தப் படத்தை திருட்டு விசிடியில் பதிவு செய்ய முடியாத அளவுக்கு புதிய தொழில் நுட்பம் ஒன்றைபயன்படுத்த உள்ளார்களாம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil