»   »  வழுக்கி விழுந்த லஷ்மி ராய்

வழுக்கி விழுந்த லஷ்மி ராய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தாம் தூம் படத்தின் ஷூட்டிங்கின்போது நடிகை லஷ்மி ராய் வழுக்கி விழுந்து லேசான காயமடைந்தார்.

12 பி, உன்னாலே உன்னாலே ஆகிய படங்களை இயக்கியுள்ள ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கும் அடுத்த படம் தாம் தூம். ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் கங்கனா ராவத், லஷ்மி ராய் ஆகியோர் ஜோடியாக நடிக்கிறார்கள்.

ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் படப்பிடிப்பில் ஜெயம் ரவி, கங்கனா ராவத், லஷ்மி ராய் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

2 நாட்களுக்கு முன்பு ஜெயம் ரவியும், லஷ்மி ராயும் வில்லன்களிடமிருந்து தப்பி ஓடுவது போன்ற காட்சியை படமாக்கினார் ஜீவா. ரவி சரியாக ஓடி விட்டார். ஆனால் லஷ்மி ராய் சரியாக ஓடாமல் அடுத்தடுத்து டேக் வாங்கினார்.

8 முறை டேக் வாங்கி விட்ட லஷ்மி 9வது முறையாக ஓடத் தயாரானார். ஜீவா ஆக்ஷன் என்று கூறியவுடன் லஷ்மி ஓடினார். ஆனால் பனி படர்ந்த பாதையில் அவர் ஓடும்போது சோர்வினால் சறுக்கி, அருகில் இருந்த பனி படர்ந்த ஏரியில் விழுந்து விட்டார்.

உடனடியாக படப்பிடிப்புக் குழுவினர் விரைந்து சென்று லஷ்மியைத் தூக்கினர். முதலுதவி கொடுத்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. பின்னர் படப்பிடிப்பு தொடர்ந்தது.

மாஸ்கோ ஷூட்டிங்கை முடித்து விட்டு நேற்று சென்னைக்குத் திரும்பிய லஷ்மி ராய், செய்தியாளர்களைச் சந்தித்து இந்த வழுக்கி விழுந்த செய்தியைத் தெரிவித்தார்.

பார்த்து ராய், அடிக்கடி வழுக்கினால் ஆபத்தாகி விடும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil