»   »  மச்சக்கார லஷ்மிராய்

மச்சக்கார லஷ்மிராய்

Subscribe to Oneindia Tamil

மச்ச பலன் பார்ப்பதை வைத்து பல தமிழ்ப் படங்களில் கிளுகிளுவென காட்சிகளை அமைப்பார்கள். அதேபோல இப்போது லஷ்மி ராயை வைத்து ஒரு ஜிலுஜிலுப்பான மச்சக்காட்சியை நெஞ்சைத் தொடு படத்தில் எடுத்துள்ளனர்.

புதுமுகம் ஜெமினி, லஷ்மி ராய் ஜோடியில் உருவாகும் படம்தான் நெஞ்சைத் தொடு. படம் முழுக்க லஷ்மி ராயின் கிளாமர் துள்ளி விளையாடியுள்ளதை சொல்லியிருக்கிறோம். இந்தப் படத்தில் உலக அழகியாக வருகிறாராம் லஷ்மி ராய். இதற்காக சிறப்புப் பயிற்சிகள் பெற்று காட்சிகளுக்கு கிளாமர் வலுவைக் கூட்டியுள்ளார் லஷ்மி ராய்.

சமீபத்தில் இப்படத்துக்காக ஒரு ஜில் காட்சியை எடுத்தனர். மச்ச பலன் குறித்த புத்தகம் ஒன்று லஷ்மி ராய் கையில் கிடைக்கிறது. ஆர்வம் அதிகரிக்க புத்தகத்தோடு தனது அறைக்குள் நுழைகிறார். கதவை மூடிக் கொண்டு புத்தகத்தைத் திறக்கிறார், கூடவே ஆடைகளையும் துறக்கிறார்.

உடலில் எங்கெங்கு மச்சம் உள்ளது என்பதைப் பார்த்து அதற்குரிய பலனைப் படித்து வியக்கிறார். ஆனால் இந்தக் காட்சிகளை அதே அறையில் தற்செயலாக நுழைந்து, மறைந்திருந்து பார்க்கும் நாயகன் ஜெமினியோ லஷ்மி ராயின் கட்டழகைப் பார்த்து வியர்க்கிறார்.

இதற்கு மேலும் இருந்தால் சரிப்படாது என்று எண்ணிய ஜெமினி மறைவிலிருந்து வெளியே வருகிறார். அந்த சமயத்தில், லஷ்மி ராய் தனது தொடையில் உள்ள மச்சத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். திடீரென ஜெமினியைப் பார்த்து விட்ட லஷ்மி ராய் அதிர்ச்சியில் உறைகிறார்.

இந்தக் காட்சி கிளாமராக மட்டுமல்லாமல், ரசிகர்களை சுவாரஸ்யத்திலும் ஆழ்த்தும் என்கிறார் இயக்குநர்.

இந்தக் காட்சிக்காக லஷ்மி ராய் உடலின் முக்கிய ஏரியாக்களில் செயற்கை மச்சத்தை ஒட்டி வைத்தார்களாம்.

படத்தின் கதை நெஞ்சைத் தொடுமோ இல்லையோ, நிச்சயம் லஷ்மி ராய் தொட்டுத் துவட்டி விடுவார் என நம்பலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil