»   »  ரசவாத லஷ்மி ராய்

ரசவாத லஷ்மி ராய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெல்காம் பேபி லஷ்மி ராய் முழுத் திறமை காட்டி ரசிகர்களை மயக்க வரும் நெஞ்சைத் தொடு படம் குறித்துத்தான் இப்போது கோலிவுட்டில் சூடான டாக் நிலவுகிறது.

பெல்காம் பேரழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் லஷ்மி ராய். பட்டம் வென்ற கையோடு படத்தில் நடிக்க வந்து விட்டார். முதல் படமான கற்க கசடறவில் அவர் நீக்கமற காட்டிய கவர்ச்சி இன்னும் கூட ரசிகர்களின் கண்களில் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது.

கிளாமர் காட்டும் விஷயத்தில் கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாத நடிகைகளில் லஷ்மி ராயும் ஒருவர். பிகினி என்றாலும் ஓ.கே.தான் மினி உடை என்றாலும் லஷ்மி ராய்க்கு டபுள் ஓ.கேதான்.

கற்க கசடற படத்துக்குப் பின்னர் பார்த்திபனுடன் இணைந்து குண்டக்க மண்டக்க நடித்தார் லஷ்மி. பின்னர் விஜயகாந்த்துடனும் சவாரி விட்டார். ஆனால் எல்லாமே லஷ்மி ராய்க்குப் பிரேக் கொடுக்க தவறி விட்டன.

தொடர்ந்து தோல்விப் படங்களையைக் கொடுத்து வந்ததால் தனது டிராக்கை மாற்ற முடிவு செய்தார் லஷ்மி ராய்.

கவர்ச்சியோடு நின்று விடாமல் தன்னை அழகாக சித்தரிக்குமாறு இயக்குநர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்து அவர்களுடன் நெருக்கமாக பழகவும் ஆரம்பித்தார். தயாரிப்பாளர்களுக்கும் தாராள தரிசனம் காட்டினார்.

இது நல்ல பலனைக் கொடுத்துள்ளதாம். நெஞ்சைத் தொடு படத்தில் புத்தம் புதிய லஷ்மி ராயைப் பார்க்கப் போகிறார்கள் ரசிகர்கள். இப்படத்துக்காக லஷ்மி ராய் கிளாமரில் புதிய வரலாறு படைத்துள்ளாராம். லண்டனைச் சேர்ந்த டிவைன் கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

பாக்யராஜின் உதவியாளராக இருந்த ராஜ்கண்ணன் படத்தை இயக்கியுள்ளார். ஜெமினி என்கிற புதுமுகம் நாயகனாக நடித்துள்ளார். கவர்ச்சி மினி குண்டு ரிஷாவும் படத்திற்கு கிளாமர் பலம் கூட்டியுள்ளார்.

ஜெமினியுடன், படு நெருக்கமாக நடித்துள்ளார் லஷ்மி ராய். அவர் கொடுத்துள்ள போஸ்கள் எல்லாம் கோடை காலத்திற்கேற்ற குளிர் தரு தர்பூசணி போல படு ஜில்லாக இருக்கிறது.

நெஞ்சைத் தொடு படம் குறித்து லஷ்மி ராய் கூறுகையில், இந்தப் படம் எனக்கு நல்ல இடத்தைக் கொடுக்கும் என நம்புகிறேன். எனது முந்தையப் படங்களுடன் ஒப்பிடுகையில், இப்படத்தில் நிறைய நடிக்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. கிளாமரும் திருப்திகரமாக வந்துள்ளது.

கிளாமர் வேடங்களில் நடிப்பது தவறான, பாவகரமான செயல் அல்ல. கிளாமர் காட்டி நடப்பது எளிதான விஷயம் அல்ல. நல்ல உடல் வாகும், கிளாமருக்குப் பொருத்தமாகவும் இருந்தால் மட்டுமே ஒருவரால் அப்படி நடிக்க முடியும்.

எனக்கு அப்படிப்பட்ட கிளாமர் உடல்வாகு இருப்பதால் தயங்காமல் கிளாமர் வேடங்களை ஒத்துக் கொள்கிறேன்.

இப்போது ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்திலும் நடிக்கிறேன். இந்தப் படமும் எனது கேரியரை தூக்கி நிறுத்தும் என்கிறார் லஷ்மி.

நெஞ்சைத் தொடு ஸ்டில்களைப் பார்த்தால் நிச்சயம் இலக்கைத் தொட்டு விடுவார் லஷ்மி ராய் என்றுதான் தோன்றுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil