டைரக்டரே வெளியிட்ட ஷுட்டிங் ஃபோட்டோ... வைரலாகும் விக்ரம் BTS ஃபோட்டோ

சென்னை : கமல் லீட் ரோலில் நடிக்கும் பிரம்மாண்ட படமான விக்ரம் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் தயாரிக்கிறது.

Recommended Video

Vikram படத்தில் Vijaysethupathi -கு மூன்று ஜோடி | Shivani, Myna Nandhini, Maheswari

ரவுடி கும்பலை எதிர்த்து போராடும் கதை என்றாலும், இந்த படத்தில் பல ஸ்பெஷல்கள் உள்ளனவாம். நீண்ட இடைவேளைக்கு பிறகு வரும் கமல் படம் என்பதால் இதில் பல சுவாரஸ்யங்களை சேர்க்க டைரக்டர் முடிவு செய்திருக்கிறாராம்.

முக்கிய ரோலில் மூவர்

முக்கிய ரோலில் மூவர்

இந்த படத்தில் கமலுடன் இணைந்து முதல் முறையாக விஜய் சேதுபதியும், ஃபகத் ஃபாசிலும் நடிக்கிறார்கள். இளம் ஹீரோவான நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம், இந்த படத்தில் கமலின் மகனாக நடிக்கிறார். இவரைத் தொடர்ந்து கைதி படத்தில் மிக முக்கிய ரோலில் நடித்த நரேனும் சில வாரங்களுக்கு முன் இணைந்துள்ளார்.

மூன்று ஜோடிகள்

மூன்று ஜோடிகள்

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிக்பாஸ் ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி ஆகியோர் நடிக்கிறார்கள் என ஏற்கனவே கூறப்பட்டது. இதில் மைனா நந்தினியும் மகேஷ்வரியும் விஜய் சேதுபதியின் மனைவிகளாகவும், ஷிவானி விஜய் சேதுபதியின் காதலியாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது.

காரைக்குடியில் ஷுட்டிங்

காரைக்குடியில் ஷுட்டிங்

விக்ரம் படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் காரைக்குடியில் துவங்கி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட ஷுட்டிங்கும் காரைக்குடியிலேயே செப்டம்பர் 18 ம் தேதி துவங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இன்ஸ்டாகிராமில் அசோசியேட் டைரக்டர் லோகி உறுதி செய்திருந்தார். இந்த படத்திற்கு டைரக்டர் ரத்னகுமார் வசனம் எழுதுகிறார். இவரும் சமீபத்தில் படத்தின் ஷுட்டிங் நடக்கும் இடத்தின் BTS ஃபோட்டோக்களை வெளியிட்டிருந்தனர்.

லைட்ஸ் ஆன்

லைட்ஸ் ஆன்

அதில், நகரின் புறநகர் பகுதியில் பெரிய பெரிய டவர்கள் அமைத்து, அதில் பெரிய கயிறுகளில் கேமிராக்களை பறக்க வைத்து ஷுட்டிங் நடத்த ஏற்பாடு நடந்து கொண்டிருப்பதாக இருந்தது. லைட்ஸ் ஆன் என்ற ஸ்டிக்கருடன் இந்த ஃபோட்டோவை டைரக்டர் ரத்னகுமார் பகிர்ந்திருந்தார்.

வைரலாகும் BTS ஃபோட்டோ

வைரலாகும் BTS ஃபோட்டோ

தற்போது டைரக்டர் லோகேஷ் கனகராஜே புதிய BTS ஃபோட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் கேமிராவை காட்டி விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசிலிடம் லோகேஷ் கனகராஜ் பேசிக் கொண்டிருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த ஃபோட்டோவுடன், Absolute bliss என கேப்ஷன் பதிவிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் வெளியிட்ட இந்த ஃபோட்டோவை பலரும் பகிர்ந்து வருகிறார்கள். இதனால் இந்த ஃபோட்டோ சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X