»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அர்ஜூன் நடித்து வரும் மணிகண்டா என்ற படத்தில் பப்பாளி பரிமளா என்ற கேரக்டரில் நடிக்கவும், ஒருபாட்டுக்கு டான்ஸ் ஆடவும் மந்த்ராவைக் கூப்பிட்டார்கள். சம்பளமும் பேசினார்கள்.

அப்போது கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே காட்ட வேண்டியிருக்கும் என்று அர்ஜூன் தரப்பில் கேட்க,அப்படின்னா எனக்கு நீங்கள் பணமும் கொஞ்சம் அதிகமாகவே தூக்கித் தர வேண்டியிருக்கும் என மந்த்ராகண்டிசன் போட்டார்.

அப்போதைக்கு ஒப்புக் கொண்டது மணிகண்டா படத் தயாரிப்பு குழு. இதையடுத்து அட்வான்சும் தரப்பட்டது.ஆனால், பண விஷயத்தில் மிகக் கறாரானவரான அர்ஜூன் பின்னர் சம்பளத்தை உயர்த்தித் தர மறுத்தார். இந்தகேரக்டருக்கு நீங்க தான் ரொம்ப சரியா இருப்பீங்க. நடிச்சே ஆகனும். அடுத்த படத்துலயும் சான்ஸ் தர்றேன் என்றுஅவரிடம் பேசினார்.

ஆனாலும் மந்த்ரா சம்பள விஷயத்தில் இறங்கி வரவில்லை, அடம் பிடித்தால் எப்படியும் சம்பளத்தை கூட்டித் தந்துநம்மை கூப்பிடுவார்கள் என்று காத்திருந்தார்.

இந்த விஷயம் தெரியவந்த மாளவிகா உடனே அர்ஜூனை தொடர்பு கொண்டார். குடுக்குற சம்பளத்தைகொடுங்க. நான் என்ன கவர்ச்சியும் காட்டுறேன் என்று கொஞ்சியுள்ளார். மேலும் இருவரும் கன்னடத்துக்காரர்கள்என்பதால் எல்லாம் ஒத்துப் போய்விட்டது.

இதையடுத்து மந்த்ராவைத் தூக்கிவிட்டு அந்த இடத்தில் மாளவிகாவைப் போடச் சொல்லிவிட்டார் அர்ஜூன்.தமிழில் எப்படியாவது மீண்டும் ஒரு ரவுண்டு வந்துவிட வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருக்கும் மாளவிகாஇதில் நன்றாகவே கவர்ச்சி காட்டி வருகிறாராம்.

பிதாமகனில் சான்ஸ் கேட்டு இயக்குனர் பாலாவை நச்சரித்து ஒரு பாட்டுக்கு டான்சும் வாங்கினார் மாளவிகா.ஆனால், பாதியிலேயே வெட்டிவிட்டுவிட்டார் பாலா. இதனால் நொந்து போயிருந்த மாளவிகா இப்போது இந்தசான்ஸை மந்த்ராவிடம் இருந்து பறித்துவிட்டார்.

இப்போ தெரியுதா மந்த்ரா ஏன் மாளவிகா மீது செம கடுப்பில் இருக்கிறார் என்பது !

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil