»   »  மாளவிகாவின் பிரமாண்ட ஆட்டம்

மாளவிகாவின் பிரமாண்ட ஆட்டம்

Subscribe to Oneindia Tamil
Malavika
முதல்வர் கருணாநிதியின் பாடலுக்கு மாளவிகா ஆடினால் எப்படி இருக்கும். உளியின் ஓசை படத்தில்தான் அந்த சூப்பர் பாட்டு இடம் பெறுகிறது.

டான்ஸில் பின்னி எடுத்து, இளம் நெஞ்சங்களில் பிரளயத்தை ஏற்படுத்துவதில் கில்லாடியான மாளவிகா, கல்யாணமான பின்னரும் கூட தனது ஆட்டத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை.

திருமணத்திற்குப் பிறகும் கூட அவர் சிங்கிள் பாட்டுக்கு ஆடுவதை தட்டுவதே இல்லை. அப்படிப்பட்ட மாளவிகாவின் அசத்தல் ஆட்டம், முதல்வர் கருணாநிதியின் கதை, வசனத்தில், இளவேனில் இயக்கத்தில், வினீத், கீர்த்தி சாவ்லா, அக்ஷயா ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் உளியின் ஓசை படத்தில் இடம் பெறுகிறது.

உளியின் ஓசை படத்தின் நாயகன், நாயகி முதல் அனைத்துக் கலைஞர்களையும் கருணாநிதியே சிறப்புக் கவனம் செலுத்தி தேர்வு செய்தார். இப்படத்தின் உருவாக்கத்தில் மிகுந்த கவனம் செலுத்தியும் வருகிறார்.

இப்படத்தில், நூற்றுக்கணக்கான சிற்பங்களுக்கு நடுவே பிரபல நடனக்காரப் பெண் நடனம் ஆடுவதாக ஒரு காட்சி வருகிறது. இதற்காக மாமல்லபுரம் அருகே பிரமாண்ட செட் போட்டு ஒரு வாரமாக படமாக்கியுள்ளனர். இப்படி ஒரு பிரமாண்ட செட் போட்டு தமிழ் சினிமாவில் ரொம்ப காலமாகி விட்டதாம்.

இந்தப் பாட்டுக்குத்தான் மாளவிகா ஆடியுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil