»   »  மாளவிகாவிடம் நடிகர் முறைகேடு

மாளவிகாவிடம் நடிகர் முறைகேடு

Subscribe to Oneindia Tamil

தெலுங்குப் படப்பிடிப்பில் நடிகை மாளவிகாவிடம் செக்ஸ் குறும்பில் ஈடுபட்டார் நடிகர் ராஜேந்திரபிரசாத். இதையடுத்து படப்பிடிப்பில் இருந்து கண்கலங்கியபடியே வெளியேறினார் மாளவிகா.இதனால் சூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டது.

விக் புகழ் ராஜேந்திர பிரசாத்துடன் அப்பாராவ் டிரைவிங் ஸ்கூல் என்ற படத்தில் நடித்து வருகிறார்மாளவிகா. இந்தப் படத்துக்காக ஹைதராபாத்தில் செட் போட்டு முதலிரவு-பாடல் காட்சி ஒன்றுஎடுக்கப்பட்டது.

கேமரா.. ஆக்ஷன் என்று டைரக்டர் குரல் தர, மாளவிகாவின் அருகே அமர வேண்டும் ராஜேந்திரபிரசாத். ஆனால், அவரோ மாளவிகா மீது பாய்ந்தார். கட்டிப்பிடித்து உதட்டில் மாறி, மாறி முத்தம்வைத்தார்.

டைரக்டர் சொன்ன காட்சிக்கும் ராஜேந்திர பிரசாத் செய்த செயலுக்கும் கொஞ்சமும் சம்பந்தமேஇல்லாததால் அதிர்ந்து போன மாளவிகா, ராஜேந்திர பிரசாத்தை ஒரு பக்கமாகத் தள்ளி விட்டு,அவரை திட்டித் தீர்த்தார்.

பதிலுக்கு ராஜேந்திர பிரசாத்தும் வாக்குவாதம் செய்த, டைரக்டர் உள்பட செட்டில் இருந்தஅனைவரும் திகைத்து நின்றனர். தனக்கு ஆதரவாகக் கூட யாரும் பேச முன் வராததால் வெறுத்துப்போன மாளவிகா, கண்கலங்கியபடி அங்கிருந்து வெளியேறினார்.

இனி ராஜேந்திர பிரசாத்துடன் நடிக்க மாட்டேன் என்று அறிவித்துள்ள மாளவிகா, அவர் மீதுநடவடிக்கை எடுக்கக் கோரி ஆந்திர நடிகர் சங்கத்திலும் புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து ராஜேந்திர பிரசாத் கூறுகையில், மிகவும் நெருக்கமாக டைரக்டர் நடிக்கச் சொன்னார்.அப்போது தெரியாமல் என் உதடு அவர் உதட்டில் பட்டுவிட்டது. என் 25 வருட சினிமாஅனுபவத்தில் 35 கதாநாயகிகளை அறிமுகப்படுத்தியவன் நான்.

என் மீது இப்படிப்பட்ட குற்றச்சாட்டு யாரும் சொன்னதில்லை என்றார்.

இதற்கிடையே மும்பையில் தனது வீட்டுக்குத் திரும்பிவிட்ட மாளவிகா கூறுகையில்,

ராஜேந்திர பிரசாத் தெரியாமல் தான் அப்படி செய்துவிட்டார் என்று முதலில் நினைத்தேன். ஆனால்,செய்வதை எல்லாம் செய்துவிட்டு, காட்சி முடியப் போகும் நிலையில் என்னைப் பார்த்து ஒருமாதிரியாக சிரித்தார். அப்போது தான் அவரது புத்தி புரிந்தது. அவரை ஒதுக்கிவிட்டுவிட்டு சத்தம்போட்டேன்.

இவ்வளவு சீப்பாக அவர் நடந்து கொண்டது கேவலமான செயல். என் வயதில் ராஜேந்திரபிரசாத்துக்கு மகளே இருப்பார். இந்த கேவலமான செயலுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.இல்லாவிட்டால் அந்தப் படத்தில் மிச்சக் காட்சிகளில் நான் நடிக்க மாட்டேன் என்றார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil