»   »  எமன் உமன் மம்தா

எமன் உமன் மம்தா

Subscribe to Oneindia Tamil

அதிசயப் பிறவியில் ரஜினி கலக்கியதைப் போல தெலுங்குப் படமான எம்மதொங்காவில் மம்தா புகுந்து விளையாடியுள்ளாராம்.

அதிசயப் பிறவியில் இறந்த ரஜினியின் உடலில் இன்னொரு ரஜினியின் உயிர் புகுந்து பல சாகசங்களைச் செய்யும். அதே பாணியில் தெலுங்கில் எம்மதொங்கா என்ற பெயரில் ஒரு படம் உருவாகியுள்ளது.

ஜூனியர் என்.டி.ஆர், ப்ரியாமணி இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். ஆனால் மம்தாவுக்குத்தான் சூப்பர் கேரக்டராம். பலவித கெட்டப்களில் வந்து அசத்தியுள்ளாராம் மம்தா.

படத்தின் கதை என்னவென்றால் ஜூனியர் என்.டி.ஆரின் ஆயுட்காலம் முடிவடைகிறது. இதையடுத்து எமலோகத்திலிருந்து எமன் கிளம்பி பூலோகம் வருகிறார். ஜூனியர் என்.டி.ஆர். உயிரைக் கவர முயற்சிக்கிறார். ஆனால் அது முடியவில்லை.

இதையடுத்து மம்தா உடலுக்குள் புகுந்து அவர் மூலமாக ஜூனியர் என்.டி.ஆரை. கவர முயற்சிக்கிறார். மம்தாவின் உடலுக்குள் புகுந்த எமன், மம்தா வடிவில் செய்யும் அட்டகாசம்தான் படத்தின் கதையாம்.

காமெடியும், ராவடியுமாக படத்தை பிரமாதமாக எடுத்துள்ளனராம். படம் முழுக்க மம்தாவுக்கு அசத்த நிறைய வாய்ப்புகளாம். அவரும் பின்னி எடுத்துள்ளாராம்.

படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் படம் திரைக்கு வருகிறதாம். இந்தப் படத்துக்குப் பின்னர் மம்தாவுக்கு தெலுங்கில் நிலையான மார்க்கெட் உருவாகும் என டோலிவுட்டில் பரவலாக பேசிக் கொள்கிறார்கள்.

எம்மதொங்காவில் மம்தாவின் நடிப்பைக் கேள்விப்பட்டு அவரைத் தேடி நிறைய வாய்ப்புகள் வந்துள்ளதாம். இருப்பினும் ஜெகபதி பாபுவுடன் மட்டும் நடிக்க இப்போதைக்கு ஒத்துக் கொண்டுள்ளாராம் மம்தா.

எம அட்டகாசம் செய்பவராக நடித்திருந்தாலும், கிளாமரிலும் கில்லி போல துள்ளி ஆடியிருக்கிறாராம் மம்தா.

தமிழிலும் இந்தப் படத்தை டப் செய்யத் திட்டமிட்டுள்ளார்களாம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil