»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

மணிரத்னம் தயாரித்து-இயக்கும் புதிய படத்தில் இயக்குனர் பாரதிராஜா வில்லனாக நடிக்கிறார். இதில்ஹேமாமாலினியின் மகள் இஷா கதாநாயகியாக நடிக்கிறார்.

மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் இந்தியில் தயாரித்துள்ள படத்தை தமிழில் எடுத்துவருகிறார். பெயர் முடிவாகவில்லை. இந்தியில் சிம்ரன் நடித்தார்.

தமிழ் ரீ-மேக்கின் சூட்டிங்கையும் மும்பையில் தான் நடத்தி வருகிறார் மணி. இதில் சூர்யா, மாதவன், சித்தார்த், மீராஜாஸ்மின், திரிஷா நடிக்கிறார்கள். இந்தியில் சிம்ரன் செய்த ரோலில் தமிழில் ஹேமாமாலினியின் மகள் இஷாதியோல் நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு ஹாலிவுட் பாணியில் செட்டிலேயே நடிகர், நடிகைகளை பேச வைத்து ரெக்கார்டிங் செய்யப்போகிறார்களாம். இதனால் டப்பிங் எல்லாம் இருக்காது என்றார்கள்.

ஸ்பாட்டிலேயே தமிழ் பேசுவதில் சிம்ரனுக்குபிரச்சனை இருந்ததால் அவரைத் தூக்கிவிட்டு இஷாவைப் போட்டுள்ளார் மணிரத்னம்.

மும்பையில் வளர்ந்தாலும் ஹேமாமாலினியின் மகள்கள் நன்றாகவே தமிழ் பேசுகிறார்களாம். ஹேமமாலினி தமிழ்ஐயங்கார் என்பதை நினைவுகூர்க. வீட்டில் தனது மகள்களுடன் தமிழில் தான் பேசுவாராம்.

இந்தப் டத்தில் பாரதிராஜா வில்லனாக நடிக்கிறார். பாரதிராஜா இப்போது தன் மகள் ஜனனியைப் பார்க்கஆஸ்திரேலியா சென்றுள்ளார். திரும்பி வந்ததும் படப்டிப்பில் கலந்து கொள்கிறார். பாரதிராஜா ஏற்கனவேகல்லுக்குள் ஈரம் என்ற படத்தில் டைரக்டராவவே நடித்துள்ளார்.

இப்போது அவர் வில்லனாக நடிப்பதை மணிரத்னம் இவ்வளவு நாட்கள் மிக சஸ்பென்ஸாகவே வைத்திருந்தார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil