க்ளைமாக்சை நெருங்கும் பொன்னியின் செல்வன்...கடைசி நிமிடத்தில் பிளானை மாற்றிய மணிரத்னம்

சென்னை : கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதி, ஐந்து பாகங்களாக வெளிவந்த பொன்னியின் செல்வன் நாவலை சினிமாவாக இயக்க பல டைரக்டர்கள் பல காலமாக முயற்சித்து வந்தனர். ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. தற்போது பொன்னியின் செல்வனை சினிமாவாக இயக்கும் முயற்சியில் டைரக்டர் மணிரத்னம் இறங்கி உள்ளார்.

அரிய வகை நோயால் போராடும் கிளாடி சாராவின் உயிரை காக்க உதவுங்கள் ப்ளீஸ்

இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு கோலிவுட்டின் மிகப் பெரிய பட்ஜெட் படமாக பொன்னியின் செல்வன் இயக்கப்பட்டு வருகிறது. இரண்டு பாகங்களாக தயாராகி வரும் இந்த படத்தில் இந்திய சினிமாவின் டாப் நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

போர்ஷனை முடித்த நடிகர்கள்

போர்ஷனை முடித்த நடிகர்கள்

சமீபத்தில் தான் ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்டோர் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் தங்களின் போர்ஷன்களை முடித்து விட்டதாக சோஷியல் மீடியாவில் அறிவித்தனர். இதனால் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்புக்கள் முழுவதும் விரைவில் முடிவடைய உள்ளதா என்ற கேள்வி எழுந்தது.

இடத்தை மாற்றிய மணிரத்னம்

இடத்தை மாற்றிய மணிரத்னம்

பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங்கை பொள்ளாச்சியில் நடத்த போவதாக கூறி வந்தனர். பொள்ளாச்சியில் பாடல் காட்சி ஒன்றை படமாக்க உள்ளதாகவும் முதலில் கூறப்பட்டது. ஆனால் இந்த பிளானை திடீரென மாற்றி ஊட்டியில் இறுதிக்கட்ட ஷுட்டிங்கை நடத்த போகிறார்களாம். மணிரத்னம் எதற்காக இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடக்கும் இடத்தை திடீரென மாற்றினார் என்ற தகவல் வெளியாகவில்லை.

நேரடியாக ஊட்டி தான்

நேரடியாக ஊட்டி தான்

சர்தார் படத்தின் ஷுட்டிங்கில் இருக்கும் கார்த்தியும், இறுதிக்கட்ட ஷுட்டிங்கில் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சினிமா வட்டார தகவலின்படி, தற்போது மத்திய பிரதேசத்தில் நடக்கும் ஷுட்டிங்கை முடித்துக் கொண்டு சென்னை வருவதற்கு பதிலாக, படக்குழு நேரடியாக ஊட்டி செல்ல உள்ளதாம்.

பிரம்மாண்ட மேக்கிங் வீடியோ

பிரம்மாண்ட மேக்கிங் வீடியோ

மற்றொரு தகவலின்படி பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் 75 சதவீதம் முடிந்து விட்டதாம். இதனால் மீதமுள்ள போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளில் டைரக்டர் மணிரத்னம் தீவிர கவனம் செலுத்தி வருகிறாராம். மீதம் இருக்கும் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முடிந்த பிறகு பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட மேக்கிங் வீடியோ வெளியிடப்பட உள்ளதாம்.

பண்டிகை கால ட்ரீட்டா

பண்டிகை கால ட்ரீட்டா

பிரம்மாண்ட வரலாற்று படமான பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் மேக்கிங் வீடியோ ஏற்கனவே தயாராகி விட்டதாம். ஆயுத பூஜை அல்லது தீபாவளிக்கு ரசிகர்களுக்கு சிறப்பு ட்ரீட்டாக இந்த மேக்கிங் வீடியோவை வெளியிட திட்டமிட்டுள்ளனராம். படத்தின் முதல் பாகத்தை 2022 ம் ஆண்டின் துவக்கத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதால், பண்டிகை நாளில் மேக்கிங் வீடியோ, ஃபஸ்ட்லுக் போன்றவற்றை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்களாம்.

இத்தனை நடிகர்கள்

இத்தனை நடிகர்கள்

பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்திய சினிமாவில் பிரபலமான நடிகர்களான விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா மேனன், ஜெயராம், பிரபு, நிழல்கள் ரவி, சரத்குமார், பார்த்திபன், லால், ரகுமான், ரியாஸ் கான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

முதல் பாகத்தை 2022 ம் ஆண்டின் முற்பகுதியிலும், இரண்டாம் பாகத்தை 2023 ம் ஆண்டின் முற்பகுதியிலும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். உலகம் முழுவதிலும் தியேட்டர்களில் மிக பிரம்மாண்டமாக இந்த படத்தை திரையிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X