»   »  மஞ்சு-பிரியங்கா-அபிநயா

மஞ்சு-பிரியங்கா-அபிநயா

Subscribe to Oneindia Tamil

மன்சூர் அலிகானின் தயாரிப்பில் உருவாகி வரும் என்னைப் பார் யோகம் வரும்படத்தில் மொபைல் லட்சுமி என்ற கிளுகிளுப்பான கேரக்டரில் அசத்துகிறார்அபிநயஸ்ரீ.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மன்சூர் தயாரிக்கும் படம் இது. இதில் அவருக்குஜோடியாக கன்னடத்து தக்காளி மஞ்சு ஜோடி போட்டு திறமை காட்டுகிறார். மஞ்சுவைவைத்து படம் எடுப்பதை விட பாடம் எடுப்பதற்கே (நடிப்பு சொல்லிக்கொடுக்கிறாராம்!) மன்சூர் அலிகான் அதிக நேரம் செலவிடுவதால் படம் எடுப்பதுரொம்ப மெதுவாக நடந்து வருகிறதாம்.

மத மத மஞ்சுவுக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம்தான் தெரியும் என்பதால் முதல்லநல்லா பேசு அப்புறம் நடிக்கலாம் எனக் கூறி விலாவரியாக தமிழ் கற்றுத் தருகிறாராம்மன்சூர். இப்படத்தில் காமெடி கலந்த தாதா வேடத்தில் நடிக்கிறாராம் மன்சூர்.

இவர்கள் தவிர அந்தக் கால அதகள அனுராதாவுக்கு எம்.எல்.ஏ. வேடமாம். அசத்திக்கொண்டிருக்கிறாராம் அனு. அவருடைய சீமந்தப் புத்திரி அபிநயஸ்ரீக்கு மொபைல்லட்சுமி என்ற கில்மாவான கேரக்டர் தந்துள்ளார் மன்சூர்.

படு கிளாமராக இதில் வந்து போகிறார் அபி. அவருக்காகவே ஒரு கும்மாங் குத்துப்பாட்டையும் வைத்துள்ளார் மன்சூர். தனது கிளாமர் மூலம் ரசிகர்களை மொக்க வைத்துசொக்க வைக்கப் போகிறார் அபி.

அதே போல தமிழில் சில படங்களில் நடித்தும் படங்கள் வெளிவராததால் வெளிச்சத்துக்கு வராமல் போனபிரியங்கா சைலுவுக்கும் ஒரு ரோல் கொடுத்துள்ளார் மன்சூர். இந்தப் படத்தின் மூலம் உன்னை தூக்கிநிறுத்துகிறேன் பார் என்றும் சைலுவுக்கு தைரியம் சொல்லியுள்ளாராம் (எத்தனைபேரைத்தான் தூக்கி நிறுத்துவாரோ!)

படம் முக்க இப்படி கிளாமர் கலவரமாக இருப்பதால் படம் முழுக்க பச்சைப் பசேல்என இருக்கப் போகிறது என்று குசுகுசுக்கிறது கோலிவுட் வட்டாரம்.

இந்தப் படத்தைப் பார்த்தால் யோகம் வருகிறதோ இல்லையோ நிச்சயம் மோகம்வரும்...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil