»   »  ஜில்பான்ஸி மான்ஸி!

ஜில்பான்ஸி மான்ஸி!

Subscribe to Oneindia Tamil

திருத்தம் படத்தில் ஜில்பான்ஸியான ரோலில் மும்பைக் குட்டி மான்ஸி, புள்ளி மானாக மாறி துள்ளி ஆடியுள்ளார்.

பல படங்களில் டான்ஸ் மாஸ்டராக இருந்து பலரையும் ஆட்டுவித்தவர் ஹரிக்குமார். திடீரென ஒரு நாள் நானும் ஹீேரா என்று கூறி தூத்துக்குடி படம் மூலம் ரசிகர்களை பயமுறுத்தினார்.

படம் சுமாராக ஓடி ரசிகர்களைக் கவர்ந்து விடவே அடுத்த படத்தில் குதித்து விட்டார். திருத்தம் என்ற பெயரில் உருவாகும் அந்தப் படத்தை ஹரிக்குமாரே இயக்குகிறார்.

இதில் அவருக்கு பிரியங்காதான் நாயகி. வெயில் படத்தில் பசுபதியின் காதலியாக வந்து ரசிகர்கள் மனதில் பச்செக்கென உட்கார்ந்து கொண்ட அதே பிரியங்காதான் இவர்.

ஹீரோயின் ஒரு பக்கம் என்றால் குத்துப் பாட்டுக்கும், கும்மாள ஆட்டத்துக்கும் மும்பையிலிருந்து ஏதாவது ஒரு குட்டியைக் கூட்டி வந்து குதியாட்டம் போட வைப்பதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஸ்டைல். அந்த வரிசையில் திருத்தம் படத்திலும் அட்டகாசமான ஒரு அழகி சதிராட்டம் போட்டுள்ளார்.

அந்த திருத்தமான வடிவழகியின் பெயர் மான்ஸி. புள்ளி மான் போல படு ஷோக்காக இருக்கிறார் மான்ஸி. கிளாமரிலும், டான்ஸிலும் பின்னி எடுக்கிறாராம். இவர் ஏற்கனவே ெதலுங்கில் ஆட்டம் போட்டுக் கொண்டிருப்பவர் தான்.

டான்ஸ் மாஸ்டரான ஹரிக்குமாரே வியந்து விக்கித்துப் போகும் அளவுக்கு ஆட்டத்தில் அட்டகாசம் செய்கிறாராம் மான்ஸி. அவர் கொடுத்துள்ள போஸ்களும், மூவ்மென்ட்டுகளும் படு அமர்க்களமாக உள்ளன.

ஜில் ஜில் ஜிகர்தண்டா கணக்காக இருக்கும் மான்ஸியின் முழுத் திறமையையும் திருத்தம் படத்தில் அழுத்தம் திருத்தமாக வெளிக் காட்டியிருக்கிறாராம் ஹரிக்குமார்.

திருத்தம் வந்த பிறகு மான்ஸி, தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் ஃபேன்ஸி ஆகி விடுவார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

லெட் அஸ் ஸீ!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil