»   »  மன்சூர் எழுதி, மகள் பாடி, திருமா ஆடி

மன்சூர் எழுதி, மகள் பாடி, திருமா ஆடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கலகல நடிகர் மன்சூர் அலிகான் நடித்து, இயக்கி, கலக்கும் என்னைப் பார் யோகம் வரும் படத்தில், மன்சூர் எழுதிய பாட்டுக்கு, அவரது மகள் லைலா அலிகான் குரல் கொடுக்க, தொல். திருமாவளவன் ஆடியுள்ளாராம்.

கர்நாடகத்திலிருந்து மஞ்சு என்ற ஜிலுஜிலு நாயகியை கூட்டி வந்து கும்மாளமாக மன்சூர் எடுத்து வரும் படம் என்னைப் பார் யோகம் வரும். படம் முழுக்க கிளாமர் மழை ஹெவியாக இருக்கிறதாம்.

மஞ்சுவை ஒரு பக்கம் கவர்ச்சி மலையில் ஏற்றி விட்டுள்ள மன்சூர், இன்னொரு பக்கம் அபிநயஸ்ரீயையும் கிளாமர் கோதாவில் இறக்கி விட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார்.

இப்படத்தில் ஒத்தப் பாட்டுக்கு ஆட்டம் போட்டுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன். கோயம்பேட்டு கொய்யாப்பழம் எனறு ஆரம்பிக்கும் அந்தப் பாடலை மன்சூரே எழுதியுள்ளார். அவரது 8 வயது மகள் லைலா அலிகான் பாடியுள்ளாராம்.

கானா பாட்டான இப்பாடல் படத்துக்கு சூப்பர் பலம் கொடுத்துள்ளதாக மன்சூர் பெருமையோடு கூறியுள்ளாராம். அவர் சொல்வதிலும் ஒரு அர்த்தம் உள்ளது. இந்தப் பாட்டை எடுப்பதற்கு முன்பு படத்தின் வியாபாரம் சூடு பிடிக்கவில்லையாம்.

திருமா ஆடியிருக்கிறார் என்ற செய்தி பரவியதும் பின்வாங்கிப் போன பல விநியோகஸ்தர்களும் ஓடோடி வந்து படத்தை வாங்க ஆர்வம் காட்டியுள்ளனராம்.

பாட்டுதான் கானாப் பாட்டு. ஆனால் அதற்குள் பல வாழ்க்கைத் தத்துவங்களைக் கொட்டி கொடுத்துள்ளாராம் மன்சூர் அலிகான்.

அது!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil