twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய்க்கும், அட்லிக்கும் நேரமே சரியில்லப்பா.. இதோ அடுத்த பிரச்சினை!

    விஜய் பட படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.

    |

    சென்னை: அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தை நான்கு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

    சர்கார் படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் விஜய் நடித்து வருகிறார். விஜய்யின் 63வது படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மீனம்பாக்கம் அருகில் உள்ள பின்னி மில்லில் அரங்குகள் அமைத்து நடந்து வருகிறது. அங்கு தேவாலயம், மருத்துவமனை, மருந்தகங்கள், பள்ளிக்கூடம் என பல படப்பிடிப்பு அரங்குகள் இப்படத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது. விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன.

    அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் பட நடிகர்களின் சம்பளத்தை கேட்டால் தலையே சுத்திடும் அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் பட நடிகர்களின் சம்பளத்தை கேட்டால் தலையே சுத்திடும்

    அரங்கு அமைக்கும் பணி:

    அரங்கு அமைக்கும் பணி:

    இந்நிலையில் நேற்று மதியம் ஒரு மணியளவில் புதிய அரங்கு அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த காய்ந்த மரக்கழிவுகள் மற்றும் இலைகளின் மீது வெல்டிங் தீப்பொறிகள் பறந்து விழுந்து தீப்பிடித்தது.

    மளமளவென பரவிய தீ:

    மளமளவென பரவிய தீ:

    தொழிலாளர்கள் சுதாரிக்கும் முன்பு தீ மளமளவென அருகில் இருந்த மற்ற அரங்குகளுக்கும் பரவியது. செட்டின் பெரும்பகுதி மரப்பலகைகள், கம்புகளால் அமைக்கப்பட்டிருந்ததால் படப்பிடிப்பு அரங்குகளில் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.

    தீர்ந்து போன தண்ணீர்:

    தீர்ந்து போன தண்ணீர்:

    உடனடியாக இது பற்றி தகவல் அறிந்த கிண்டி, தாம்பரம் சானிடோரியம் பகுதி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ கொழுந்து விட்டு எரிந்ததால், அவர்கள் கொண்டு வந்த தண்ணீர் சீக்கிரமே காலியானது. எனவே, சென்னை குடிநீர் வாரிய தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு அதில் இருந்த தண்ணீரை கொண்டு தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.

    4 மணி நேர போராட்டம்:

    4 மணி நேர போராட்டம்:

    பின்னர் ஒரு வழியாக நான்கு மணி நேர போராட்டத்திற்குப் பின் தீயை முழுவதுமாக அணைத்தனர். ஆனால் அதற்குள் 25-க்கும் மேற்பட்ட சினிமா அரங்குகள் தீயில் எரிந்து நாசமானது. அங்கு அவசர கால வசதிகள், தண்ணீர் வசதிகள் இல்லாததே இந்த அளவிற்கு நாசம் ஏற்படக் காரணமாகக் கூறப்படுகிறது.

    அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விஜய்:

    அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விஜய்:

    இந்த தீவிபத்தின் போது அங்கு படப்பிடிப்பு எதுவும் நடைபெறவில்லை. இதனால் விஜய் உட்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அரங்குகள், பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதுபற்றி மீனம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆரம்பம் முதல் பிரச்சினை:

    ஆரம்பம் முதல் பிரச்சினை:

    ஏற்கனவே விஜய் - அட்லி கூட்டணியில் வெளியான தெறி மற்றும் மெர்சல் என இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி பெற்றன. எனவே மூன்றாவது முறையாக அவர்கள் கூட்டணி அமைத்திருப்பதால், இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. ஆனால் இப்படம் ஆரம்பித்ததில் இருந்தே தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

    எலக்ட்ரீசியன் காயம்:

    எலக்ட்ரீசியன் காயம்:

    விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் கதை தன்னுடையது என அட்லிக்கு எதிராக குறும்பட இயக்குநர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். அதோடு, கடந்த மாதம் 23-ந்தேதி சென்னை செம்பரம்பாக்கத்தில் நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்தில் 100 அடி உயரத்தில் இருந்து மின்விளக்கு விழுந்து எலக்ட்ரீசியன் ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சைப் பெற்று வருகிறார் என்பது நினைவுகூரத்தக்கது.

    English summary
    A fire has broken out in the Binny Mills compound in Chennai and the sets of 'Thalapathy 63' have been damaged.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X