»   »  மதுமிதாவின்E3

மதுமிதாவின்E3

Posted By:
Subscribe to Oneindia Tamil

E3. இது ஏதோ நட்சத்திரக் கலை இரவு நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்ட பெயர் என்று நினைத்து விடாதீர்கள். இது ஒரு தமிழ்ப்படத்தின் பெயர்.இதன் அர்த்தம் இளமை இதோ இதோவாம். (மூன்று இ.. இதனால் E3).

இருந்தாலும் இந்த தமிழ் சினிமாக்காரர்கள் அநியாயத்துக்கு ராமதாஸ், திருமாவளவன் குரூப்பை சீண்டுகிறார்கள். கமல் தனது மும்பைஎக்ஸ்பிரஸ் தலைப்பை யார் என்ன சொன்னாலும் மாற்ற மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

இயக்குனர் சூர்யா தனது பி.எப். படத்தின் பெயரை மாற்றியே தீர வேண்டும் என்ற ராமதாஸ் வம்படியாக இருக்க, சூர்யா அதைக்கொஞ்சமும் சட்டை செய்யாமல் தனது அடுத்த படத்திற்கு ஏ.சி. என்று பெயர் வைத்திருக்கிறார்.

இந் நிலையில் E3 என்ற பெயருடன் புதிதாக ஒருவர் கிளம்பியிருக்கிறார். E3 என்றால் இளமை இதோ இதோ என்று அருஞ்சொற்பொருள்விளக்கம் தருகிறார் பிரபல கதாசிரியர் ஆர்.செல்வராஜின் மகன் தினேஷ் செல்வராஜ்.

இவர் மணி ரத்னத்திடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். இயக்குனராக E3 தான் இவரது முதல்படம். இந்தப்படத்தில் சாய் ராகேஷ், வினோத்ராஜ், அனூப்குமார் ஆகிய புதுமுகங்கள் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

கதாநாயகியாக குடைக்குள் மழை ஹீரோயின் மதுமிதா நடிக்கிறார். நா. முத்துக்குமார் பாடல்களுக்கு டி.இமான் இசையமைக்கிறார்.படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. மே மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

குடைக்குள் மழை டர் ஆகிவிட்டாலும் மதுமிதாவுக்கு மளமளவென பல படங்கள் புக் ஆகியிருக்கின்றன. E3 தவிர, அமுதே, உன்னோடுஒரு நாள், சாணக்யா ஆகிய படங்களிலும் மதுமிதா நடித்து வருகிறார்.


அமுதே படத்தில் ஜெய் ஆகாஷ் தான் ஹீரோ. அவருக்கு மதுமிதா, உமா என இரண்டு ஜோடிகளாம். துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின்மனதைத் தொட்டு படத்தை இயக்கிய எழில்தான் இந்தப் படத்தை இயக்குகிறார்.

உன்னோரு ஒரு நாள் படத்தில் மதுமிதாவுக்கு ஜோடியாக புதுமுகம் சைலேஷகுமார் நடிக்கிறார். கேரளாவில் நடைபெற்ற ஒரு உண்மைச்சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.

சாணக்யா படத்தில் சரத்குமாருடன் மதுமிதா ஜோடி சேருகிறார். இந்தத் தமிழ் படங்கள் தவிர, மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாகபாசில் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கும் மதுமிதாவின் ஊர் ஆந்திரா.

இதனால் சிரஞ்சீவி தான் இவருக்கு மிகப் பிடித்த நடிகராம்.

பரத நாட்டியம் கற்று அதை அரங்கேற்றம் செய்தபோதுதான் அதைப் பார்த்த தெலுங்கு புரோடியூசர் மூலமாக சினிமாவுக்கு வந்தவர்மதுமிதா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil