»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனது மகன் பிரஷாந்தை எப்படியாவது முன்னுக்குக் கொண்டுவந்துவிட தீவிரமாக முயன்று வரும்தியாகராஜனுக்கு இதுவரை அந்த முயற்சியில் பிரேக் கிடைக்கவில்லை.

கடைசியாக பிரஷாத்தை வைத்து பல கோடிகளில் தியாகராஜன் தயாரித்த ஜெய் படம்கோவிந்தாவானது. இதனால் மலையூர் மம்பட்டியானுக்கு நஷ்டம் ஏதுமில்லை. படத்தை நல்லவிலைக்கு வினியோகஸ்தர்கள் தலையில் கட்டிவிட்டார். வாங்கிய அவர்களது கைகளைத் தான் படம்கடித்து குதறிவிட்டது.

அந்தப் படத்தின் தோல்வியால் பிரஷாத்துக்கு வேறு புதிய படங்களும் புக் ஆகவில்லை. இதனால்மீண்டும் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துவிட்டார் தியாகராஜன்.

வித்தியாசமான அடிதடி, காதல் கதைகளே இப்போது விலைபோய்க் கொண்டிருக்கும் நிலையில் பேய்கதையை எடுக்கப் போகிறார்களாம். இதில் பிரஷாந்துக்கு ஜோடியாக மீனா சேர்க்கப்பட்டுள்ளார்.

வழக்கமாக பிரஷாந்துக்கு ஐஸ்வர்யா ராய் ரேஞ்சில் அட்டாகாசமான புதுமுகத்தைத் தேடும்தியாகராஜன் இந்த முறை மலையாளத்துக் கட்டையான தெலுங்கு ஹீரோயின் ஆசினுடன் பேச்சுநடத்தினார்.

ஆனால், பேயக் கதை என்றவுடன் ஒரு கும்பிடு போட்டுவிட்டுப் போய்விட்டார் ஆசின்.

இதையடுத்து மீனாவே போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். மீனா பல ரவுண்ட் பெருத்துப்போய் பிரஷாந்துக்கு அக்கா மாதிரி இருந்தாலும், பேய்க் கதைக்கு மீனாவின் கண்கள் பொறுத்தமாகஇருக்கும் என்பதால் இந்த முடிவாம்.

பிரஷாந்துக்கு ஜோடியாக மீனாவை ஏற்க முடியவில்லை என்று சூட்டிங் ஸ்பாட்டிலேயே சிலர்காதுபட பேச இப்போது எடையையும் குறைத்துக் கொண்டிருக்கிறார் மீனா.

இளம் தம்பதியான பிரஷாந்த்- மீனா ஆகியோர் குடியேறும் பிளாட்டில், ஏற்கனவே தற்கொலைசெய்து கொண்ட ஒரு பெண் ஆவியாக சுற்றுகிறார். அந்த ஆவி மீனாவின் உடலில் புகுந்து செய்யப்போகும் ஜீபூம்பா தான் கதையாம்.

திகில் படம் என்பதால் அதற்குப் பொறுத்தமாக ஷாக் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் இந்தப் படப்பிடிப்பில் பேயைப் பார்த்து மிரண்டு ஓடுவது போன்ற காட்சியில் மீனாதடுக்கி விழுந்து காலில் வெட்டுப்பட்டு ரத்தம் ஓட, சூட்டிங்கே கேன்சல் செய்யப்பட்டதாம்.

தமிழில் சுத்தமாக சான்ஸே இல்லாமல் கன்னடம் பக்கமாய் ஒதுங்கி அங்கு அம்மன் வேடங்களில்கலக்கிக் கொண்டிருக்கும் மீனா தமிழில் பேய் கேரக்டர் என்று சொன்னதும், எப்படிவது தமிழில்மீண்டும் நடித்தால் போதும் என்ற நிலையில் இருக்கும் மீன்ஸ் அதை மறுக்காமல் ஒப்புக் கொண்டாராம்.

தமிழ்ப் படங்களே இல்லாமல் போனதால் பெங்களூரில் தயாரிப்ப்பாளர்கள் செலவில்ஹோட்டல்களில் தான் வாசம் செய்து வருகிறார் மீனா. சென்னை சாலிக்கிராமத்தில் ஆசைஆசையாய் அவர் கட்டிய வீட்டில் வாடகைக்கு விடப்படும் என்ற போர்டு தொங்குகிறது.

ஷாக் படத்துக்குப் பின் தமிழில் மீண்டும் சான்ஸ் வந்தால் தான் சென்னையில் மீண்டும்குடியேறுவாராம் மீனா. இல்லாவிட்டால் மலையாளத்தில் மோகன் லாலுடன் புக் ஆகியுள்ள ஒருபடத்தை முடித்துவிட்டு விரைவில் டும் டும் கொட்டிவிடும் திட்டத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil