»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மகாசிவராத்திரி என்ற பக்திப் படத்தில் சிவபக்தையாக நடித்து வருகிறார் நடிகை மீனா

மீனா ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு என கொடிகட்டிப் பறந்தார். தமிழ் ரசிகர்களுக்கு சேலையில் தரிசனமும்,தெலுங்கு ரசிகர்களுக்கு நீச்சலுடை தரிசனமும் தந்தார். முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் இணைந்துநடித்தார்.

இப்போது பீல்டில் இருக்கும் கதாநாயகிகளில் ரம்யா கிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக மூத்த நடிகையாக இருப்பவர்இவர்தான். அதனால் தான் என்னவோ, இளைய தலைமுறை நடிகர்கள் இவரை ஓரங்கட்டி விட்டனர். தமிழில்படங்கள் குறைந்ததும், வேறு வழியின்றி சம்பளம் குறைவாகத் தரும் கன்னட படவுலகுக்குத் தாவினார்.

அங்கு அவர் நடித்த சுவாதிமுத்யம் (சிப்பிக்குள் முத்து ரீமேக்)படம் சூப்பர் ஹிட் ஆகவே, அடுத்து ஒரு படம்வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கிடையே தமிழில் அன்புச்சகோதரன் என்ற படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாகவும்,மகாசிவராத்திரி என்ற படத்தில் சிவபக்தையாகவும் நடித்து வருகிறார்.

கண்ணாத்தாள், தாயே புவனேஸ்வரி ஆகிய பக்திப் படங்களைத் தயாரித்த ஆதிபராசக்தி நிறுவனம்தான்மகாசிவராத்திரி படத்தையும் எடுத்து வருகிறது. ஒரு பக்தையின் வாழ்க்கையில் சிவன் ஏற்படுத்தும்அற்புதங்களைப் பற்றிய கதையாம்.

மீனாவுக்கு ஜோடியாக ராஜேந்திர பிரசாத் என்ற தெலுங்கு நாயகன் நடிக்கிறார். இவர் கஸ்தூரிராஜா இயக்கியவாசுகி என்ற படத்தில் தலைகாட்டியவர். சாய்குமார், பொன்னம்பலம், பிரமிளா, நளினி ஆகியோரும்நடிக்கிறார்கள்.

பக்திப்படமாக இருந்தாலும், கவர்ச்சி இல்லையென்றால் ரசிகர்களை தியேட்டர் பக்கம் இழுக்க முடியாது என்பதைஉணர்ந்தவர்களாக, தாரிகாவை பிடித்து போட்டிருக்கிறார்கள்.

வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் மீனாவின் லொள்ளு இன்னும் குறையவில்லையாம். அண்மையில் ஒருபடத்தில் சத்யராஜுக்கு ஜோடியாக நடிக்க அணுகினார்களாம். வயதான ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்றுமுகத்தில் அடித்தமாதிரி திருப்பி அனுப்பி விட்டாராம்.

இதில் கூத்து என்னவென்றால் ரஜினியின் அடுத்த படத்தில் நடிப்பதற்கு படு பயங்கர முயற்சிகளில் அம்மணிஇறங்கியிருப்பதுதான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil