»   »  கற்பழிப்பு மீரா!

கற்பழிப்பு மீரா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனது திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக கற்பழிப்புக் காட்சி ஒன்றில் மீரா ஜாஸ்மின் நடித்துள்ளாராம்.

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் கற்பழிப்புக் காட்சிகள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். ஹீரோயின் அல்லது ஹீரோவின் தங்கச்சியை வில்லன்கள் கற்பழிப்பது போல காட்சி அமைப்பார்கள்.

இந்தக் கற்பழிப்புக் காட்சிகளை தமிழ் சினிமாக்காரர்கள் படமாக்குவதே அலாதியானதாக இருக்கும். முள் செடியில் சேலை விழுவதைப் போலவோ அல்லது ஓநாய் பொம்மையை சிவப்பு விளக்கொளியில் படு குளோசப்பில் காட்டியோ அல்லது தரையில் விழுந்து துடிக்கும் மீனையோ காட்டி கற்பழிப்புக் காட்சியை படமாக்குவர்.

சமீப காலமாக இதுபோன்ற கொடூரமான கற்பழிப்புக் காட்சிகள் எதுவும் படமாக்கப்படுவதில்லை. இந்த நிலையில் முன்னணி நாயகியான மீரா ஜாஸ்மின் நேபாளி படத்தில் கற்பழிப்புக் காட்சி ஒன்றில் நடித்துள்ளாராம்.

சுட்டிப் பெண்ணாக, அசட்டுப் பெண்ணாக நடித்து வரும் மீரா ஜாஸ்மின், நேபாளி படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நேபாள நாட்டுக்காரராக பரத் கெட்டப் சேஞ்ச் செய்து அசத்தி நடிக்கிறார்.

இப்படத்தில் ஒரு கற்பழிப்புக் காட்சி இடம் பெற்றுள்ளது. அதில் மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார். இதுவரை வக்கிரமான, படு கிளாமரான ரோல்களில் இதுவரை மீரா ஜாஸ்மின் நடித்ததில்லை.

ஆனால் நேபாளி படத்தில் அவர் கற்பழிப்புக் காட்சியில் நடிக்க ஒத்துக் கொண்டார். இதற்குக் காரணம், இக்காட்சி படத்துக்கு மிகவும் முக்கியமானது என்பதோடு, கண்ணியமாக இக்காட்சியைப் படமாக்குவோம் என இயக்குநர் உறுதியளித்ததால் இக்காட்சியில் நடிக்க ஒத்துக் கொண்டாராம் மீரா.

வில்லனாக நடித்த ராஜா ரவீந்தர், மீராவைக் கற்பழிப்பது போல காட்சியைப் படமாக்கினர். இந்தக் காட்சியைப் படமாக்க 3 நாட்கள் ஆனதாம்.

சமீப காலமாக ஹீரோயின்கள் கற்பழிப்புக் காட்சிகளில் இடம் பெறுவது போன்ற காட்சிகள் தமிழ் சினிமாவில் குறைந்து விட்டது. முன்பு போல கற்பழிப்புக் காட்சிகளை இப்போது படமாக்குவதில்லை.

சமீபத்தில் வெளியான பருத்தி வீரன் படத்தில் ப்ரியா மணியைக் கற்பழிக்கும் காட்சியை அமீர் விலாவாரியாக படமாக்கியிருந்தார். இதைத் தொடர்ந்து மீரா ஜாஸ்மின் கற்பழிப்புக் காட்சியில் நடித்துள்ளார்.

நல்ல மாற்றம்தான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil