»   »  மீராவும் தாமினியும்

மீராவும் தாமினியும்

Subscribe to Oneindia Tamil
ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக படத்துக்குப் படம், காட்சிக்கு காட்சி ஏதாவது வித்தியாசம் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் சினமாடைரக்டர்கள்.

அதிலும் பாடல் காட்சிகளில் புதுமையைக் காட்ட நம்மவர்கள் படும் பாடு சொல்லி மாளாது.

ஜெயம் படத்தில் ரவியை கயிற்றில் கட்டி தொங்க விட்டு ஹீரோயின் சதாவுடன் டூயட் பாட வைத்தார்கள். அந்த வரிசையில் அறிவுமணிபடத்தில் வித்தியாசமான முதலிரவுக் காட்சியை வைத்துள்ளார் இயக்குனர் கென்னடி.

ஹீரோ முரளிக்கு, ஹீரோயின் மீரா வாசுதேவனுடன் முதலிரவு. வழக்கம் போல எல்லா ஐட்டங்களும் ரெடியாக இருக்க டூயட்டைஆரம்பிக்கிறார்கள் முரளியும், மீராவும்.

இந்த இடத்தில்தான் வித்தியாசத்தை புகுத்துகிறார் கென்னடி. கதாநாயகனான முரளிக்கு மனைவியுடன் சந்தோஷமாக இருக்கும் நேரமாகபார்த்து முன்னாள் காதலியான தாமினி நினைவுக்கு வந்துவிடுகிறார்.

இதனால் மனைவியுடன் சந்தோஷ டூயட் பாடும் முரளி, கூடவே கனவில் தாமினியுடனும் டூயட் பாடுகிறார்.

மனைவியுடனும், காதலியுடனும் அவர் விரக தாபத்துடன் மாறி மாறிப் பாடும் டூயட் காட்சிகளில் கவர்ச்சியையும் சேர்த்து வித்தியாசமானமுதலிரவாக அமைத்துள்ளார் கென்னடி. இந்தப் பாடலில் மீராவும் கன்னடத்தைச் சேர்ந்த தாமினியும் போட்டி போட்டுக் கொண்டுஜமாய்த்திருக்கிறார்களாம்.

(நல்லவேளை இரண்டு பேரையும் ஒரே ரூமில் வைத்து முதலிரவு நடத்தாமல் விட்டார்களே)

இந்தப் படத்தில் மீரா வாசுதேவனுக்கு மேலும் இரு உட்டாலங்கடி ஆட்டங்களை வைத்துள்ளார்கள். அதில் கவர்ச்சியில் அதீத தூக்கல்காட்டி அசத்தியிருக்கிறாராம் மீரா.

இந்தப் படத்தை கிட்டத்தட்ட முடித்துவிட்ட இயக்குனர் கென்னடி, அடுத்து கவனம் செலுத்தி வரும் படம் ஒளி. இந்தப் படத்திலும் முரளிதான் ஹீரோ. நீண்ட நாட்களாகவே கிடப்பில் போடப்பட்ட ப்ராஜெக்டுக்கு மீண்டும் ஒளி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதில் முரளிக்கு ஜோடியாக தெலுங்கில் பிரபலமான பூனத்தை களமிறக்குகிறக்கியுள்ளார் கென்னடி. ஏற்கனவே பூனத்தை வைத்துஎடுக்கப்பட்ட காட்சிகளில் இந்தப் பூனையும் பால் குடிக்குமா ரேஞ்சுக்கு அசத்தியிருந்தார்.

இப்போது வாய்ப்பில்லாமல் சும்மா இருக்கும் பூனம், மீண்டும் சான்ஸ்களைப் பிடிக்கும் நோக்கத்தில் தீவிரமாக இருக்கிறார். இதனால்படத்தில் முழுப் பாய்ச்சல் காட்டிக் கொண்டிருக்கிறாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil