»   »  சூட்டிங் ஸ்பாட்டில் மீரா வாசுதேவன் படுகாயம்

சூட்டிங் ஸ்பாட்டில் மீரா வாசுதேவன் படுகாயம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images
படப்பிடிப்பில் வி்ல்லன் நடிகர் தள்ளிவிட்டதில் நடிகை மீரா வாசுதேவன் கண்ணில் அடிபட்டு மயங்கி விழுந்தார்.

தனியார் தொலைக்காட்சிக்காக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் புதுமைப் பெண்கள் என்ற தொலைக்காட்சி தொடரை தயாரித்து வருகிறார்.

இந்தத் தொடரை செல்வம் இயக்குகிறார். இதில் முன்னாள் ஹீரோயினான மீரா வாசுதேவன், ரேகா, நீலிமாராணி, வந்தனா ஆகியோர் நடிக்கின்றனர்.

இதில், மீரா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஒரு தாய்க்கும், மூன்று மகள்களுக்கும் இடையே நடைபெறும் கதையாம் இது. தாயாக ரேகா நடிக்கிறார்.

இந்த தொடரின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஏ.ஆர்.எஸ். கார்டனில் நடைபெற்று வருகிறது. போலீஸ் அதிகாரியாக நடிக்கும் மீரா வாசுதேவன், ஒரு ரவுடியை துரத்துவது போன்ற காட்சி நேற்று படமாக்கப்பட்டது.

மீரா வாசுதேவனை வில்லன் தள்ளிவிட்டு ஓடியதை டைரக்டர் செல்வம் படமாக்கிக் கொண்டிருந்தார். வில்லன் தள்ளிய பின் கதறியபடி விழுந்தார் மீரா. அவர் நடிக்கிறார் என அனைவரும் நினைத்திருக்க ஷாட் ஓ.கே என்று டைரக்டர் சொன்ன பிறகும் கீழே விழுந்த மீரா எழவில்லை.

அதிர்ச்சியடைந்த படப்பிடிப்பு குழுவினர் மீராவை நெருங்கியபோது அவர் கண்ணில் இருந்து பொல பொலவென்று ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. மீரா வாசுதேவன் மயங்கிக் கிடந்தார்.

இதையடுத்து டாக்டர் வரவழைக்கப்பட்டு முதலுதவி சதரப்பட்டது. நினைவு திரும்பிய பின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு மீராவை பரிசோதித்த டாக்டரகள், அவரது கண்ணில் ரத்தம் கட்டியிருக்கிறது. அது சரியாக ஒரு மாதம் ஆகும். அதுவரை ரெஸ்ட்டில் இருக்க வேண்டும் என்று அட்வைஸ் தந்துள்ளனராம்.

இதனால் புதுமைப பெண்களில் மீரா சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு பிரேக் தரப்பட்டுள்ளது.

பீமா படத்தை தயாரித்து அதில் நிதி சிக்கல் காரணாக ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வரும் ஏ.எம்.ரத்னத்துக்கு இது இன்னொரு அடி.

Read more about: meeravasudevan shooting spot

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil