»   »  தங்கமான மேகா!

தங்கமான மேகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil


பசுபதி மே.பா ராசக்காபாளையத்தில் முண்டு கட்டி ரசிகர்களை உசுப்பேத்திய மேகா நாயர் இப்போது சத்யராஜுக்கு ஜோடியாக சிங்கிள் நாயகியாக வந்து அசத்திக் கொண்டிருக்கிறார்.

Click here for more images

லேட்டஸ்டாக ரிலீஸான பசுபதி மே.பா. ராசக்காபாளையம் படத்தைப் பார்த்தவர்கள் அதில் நடித்த விவேக், ரஞ்சித்தை விட கச்சிதமான உடல் வாகுடன், மலையாளத்து முண்டு கட்டி, டீக்கடைப் பெண்ணாக வந்து போன மேகா நாயரத்தைதான் ரொம்பவும் ரசித்திருப்பார்கள்.

சின்ன ரோல் ஆனாலும் ரசிகர்களின் மனங்களை சில்லிட வைத்து விட்டார் மேகா நாயர். மலையாளத்திலிருந்து வந்த மல்லிகைப் பூவான மேகாவுக்கு முதல் படத்திலேயே கிளாமராக வந்து போனதில் கொஞ்சம் கூட வருத்தம் இல்லையாம். காரணம், இந்த ரோலை வைத்து இப்போது சத்யராஜுடன் ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதே, அதனால்.

முதல் படத்தில் பிட் ரோலில் வந்த மேகா இப்போது தங்கம் என்ற படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாக நடிக்கிறாராம். படத்தில் மேகாவுக்கு அட்டகாசமான கேரக்டர்.

ஊர் மக்களால் பெரிதும் மதிக்கப்படுபவர் தங்கம். மக்களுக்கு சேவை செய்வதற்காகவே கல்யாணம் கூட செய்து கொள்ளவில்லை அவர். ஆனால் அவர் மீது மயங்கிய நாயகி, அவரை மயக்கி தனது வலையில் வீழ்த்தி கல்யாணம் செய்து கொள்கிறாள்.

இப்படத்திலும் மேகாவுக்கு கிளாமர் போர்ஷன் சீரும் சிறப்புமாக இருக்கிறதாம். அதேசமயம், நடிப்புக்கும் நல்ல வேட்டையாம்.

சத்யராஜுடன் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு என்றாலும் கூட நமீதா கூடத்தான் முதலில் சீனியர் ஹீரோக்களுடன் கலக்கினார். இப்போது அவரது ரேஞ்சே மாறி விட்டதே, அதுபோல எனக்கும் சத்யராஜ் படம் மூலமாக பெரிய பிரேக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார் மேகா.

நாயர் நம்பிக்கை நல்லபடியாக முடியட்டும்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil