»   »  பட்டாம்பியிலிருந்து ஒரு பட்டாம்பூச்சி ...

பட்டாம்பியிலிருந்து ஒரு பட்டாம்பூச்சி ...

Posted By:
Subscribe to Oneindia Tamil

நீ நான் நிலா படத்தின் நாயகி, பாலக்காடு பக்கம் உள்ள பட்டாம்பி என்ற ஊர் கொடுத்த அழகு நிலா. இந்த குளிர் நிலா ஜில்லென நல்ல தமிழிலும் பேசி அசத்துகிறார்.

நீ நான் நிலாதான் மேக்னாவுக்கு தமிழில் முதல் படம். தமிழ் இவருக்கு ெராம்ப நன்றாகவே பேச வருகிறது. அதிலும் ல, ள, ழ பிரச்சினையே இல்லாத அளவுக்கு படு சுத்தமாக பேசுகிறார்.

எப்படி ஆத்தா இப்படி என்று ஆச்சரியத்தோடு அரட்டையை ஆரம்பித்தோம். அதுவா, இதில் என்ன ஆச்சரியம். நான் பட்டாம்பிப் பொண்ணு. அங்கெல்லாம் (எங்கெல்லாம்தான் தமிழ் இல்லை) தமிழையும், மலையாளத்தையும் படு சரளமா பேசுவாங்க. அதனால் நானும் சிறு வயது முதலே தமிழிலும் நன்றாகப் பேசுவேன்.

எனக்கு ஒரு அப்பா, ஒரு அம்மா (ேபரு சதி), ரெண்டு பிரதர்ஸ். எனக்கு இதுதான் முதல் படமே. இதுவரை ஒரு படத்திலும் நடித்ததில்லை. பி.ஏ படிச்சிட்டிருக்கேன் (படிப்பு ரொம்ப முக்கியம்) அப்புறம் மாடலிங் செய்து கொண்டிருந்ேதன். அதன் மூலமாகத்தான் சினிமா வாய்ப்பு வந்தது.

கொச்சியில் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது என்னைப் பார்த்த சிலர் நடிக்க வர்றியாம்மா என்று கேட்டனர். ஆனால் எனக்கு பயமாக இருந்தது. டான்ஸ் ஆட வரும், அவ்வளவுதான், நடிப்பு குறித்து பயமாக இருந்ததால் வீட்டில் கேட்டேன். அதுக்கு அப்பாவும், அம்மாவும் முதலில் சினிமாவுக்குத் தேவையான திறமைகளை டெவலப் செய்துக்கோ அப்புறமா பார்க்கலாம் என்றனர்.

அவர்கள் சொல்படி திறமைகளை மேம்பபடுத்தினேன். அப்போதுதான் நீ நான் நிலா பட வாய்ப்பு வந்தது. இதில் எனக்கு ஒன்றுக்கு இரண்டு ஹீேராக்கள். இருந்தாலும் எந்தப் பயமும் இல்லாமல் நடிக்கிறேன்.

என்னோட கேரக்டர் பெயர்தான் நிலா. அதில் எனக்குப் பெருமை. ரஜினி படங்களில் மட்டும்தான் கேரக்டரின் பெயரை வைப்பாங்க. இப்ேபாது எனக்கும் அந்தப் பெருமை கிடைச்சிருக்கு. சந்ேதாஷமாக இருக்கு என்று பொங்கினார் நிலா, ஸாரி மேக்னா.

மேக்னாவுக்கு கிளாமராக நடிக்க எந்த ஆட்சேபனையும் இல்லையாம். சினிமான்னாலே கவர்ச்சிதான். கிளாமர் இல்லாத படம் இப்ேபாது எங்கு வருகிறது. எனவே கதைக்குத் தேவையானதாக இருந்தால் நிச்சயம் கிளாமராகவும் நடிப்பேன். அதில் எனக்கு தயக்கமே இல்லை.

இந்தப் படம் கிடைத்த நேரமோ என்னவோ இப்போது மலையாளத்திலும் சில பட வாய்ப்புகள் வந்துள்ளதாம். நீ நான் நிலா வந்த பிறகு அவற்ைற ஒத்துக் ெகாள்ளலாம் என இருக்கிறாராம்.

நல்லா நடிங்க சேச்சி!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil