»   »  பத்த வைக்கும் மேனகை!

பத்த வைக்கும் மேனகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜில் ஜில் ஜிகர்தண்டா போல ஜிலீர் அழகியாக தமிழுக்கு வருகிறார் கன்னடத்து காந்தக் கன்னி மேனகை.

ரம்பை, மேனகை, ஊர்வசி எல்லாம் இந்திர லோகத்து சுந்தரிகள். அவர்களை எல்லாம் நேரில் பார்க்க வேண்டுமானால் நிறைய செலவாகும். அதாவது நிறைய நல்லது செய்ய வேண்டும். அப்போதுதான் மேலே ேபாய் அவர்களைப் பார்த்து கெட்டுப் போக முடியும்.

அதெல்லாம் நடக்கிற காரியமா. அதனால்தான் கோலிவுட், டோலிவுட், பாலிவுட்டிலிருந்து அவ்வப்போது சில கலக்கல் கன்னிகள் வந்து ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்து, ஜாலிவுட்டுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார்கள்.

லேட்டஸ்டாக வந்து சேர்ந்துள்ளவர்தான் மேனகை. ஏற்னவே தமிழ் சினிமாவுக்கு ரம்பாவும், ஊர்வசியும் ஒரு ரவுண்டு அடித்து முடித்து விட்டு போய் விட்டார்கள். இப்போது மேனகையின் ரவுண்டு.

படு திமிசாக, ஒரு தினுசாக இருக்கிறார் மேனகை. ெபாருத்தமான பெயர். மேனகையைப் பெற்ற ஊர் பெங்களூர். எனவே பெயரில் மட்டுமல்லாமல் பார்ப்பதற்கும் படு ஜில்லாக இருக்கிறார்.

தீக்குச்சி என்ற படத்தில் அறிமுகமாகிறார் மேனகை. லூக்காஸ் என்பவர்தான் தயாரிக்கிறார். மேனகை நல்ல உயரம், இவரைப் பார்த்தால் ரசிகர்களுக்குப் ேபாய் விடும் துயரம்! அடடா என்று உச்சுக் கொட்ட வைக்கும் உயிர்ப்பு அவரது கிளாமர் நடிப்பில்.

படத்தின் பெயரை தீக்குச்சி என்று வைத்து விட்டதால், தியேட்டர்களும், ரசிகர்களும் பற்றி எரிந்து பஸ்பமாகி விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் மேனகைைய படம் முழுக்க கிளாமர் ஆட்டம் ஆட விட்டிருக்கிறார்கள்.

மினி ஸ்கர்ட்டிலும், பிகினி கட்டிலும் வந்து கொட்டமடித்துள்ளார் மேனகை. இப்படி ேபாட்டுத் தாக்கியுள்ளீர்களே, ஏனாய்த்து நிமகே (என்னாச்சு உங்களுக்கு) என்று மேனகையிடம் கேட்டபோது அவர் பிளிறியது:

அப்படியெல்லாம் சொல்லப்படாது (வாயில் போட்டுக் கொண்டோம், தொடருங்கோ மிஸ். மேன்!). ஒரு நடிகை என்றால் முடிந்தவரை அவரது அழகை வெளிக் காட்ட வேண்டும். அதில் தயக்கமே படப்படாது.

நம்மைப் பார்க்கும் ரசிகர்களுக்கு முடிந்தவரை சந்தோஷம் கொடுப்பதே நமது முக்கிய வேலை. அதைத்தான் நான் தீக்குச்சியில் செய்துள்ளேன். அதேசயம் எல்லையை மீறவும் இல்லை, மீறவும் மாட்டேன் (அது என்ன எல்லையோ!)

ெராம்ப செக்ஸியாக மூவ்மென்ட்ஸ்கள் காட்டி ரசிகர்களை கெடுக்கும் வகையில் நடிக்கக் கூடாது. அது ஆபாசம் (அடி ஆத்தீ!).

தீக்குச்சி எனது முதல் படம். ஷூட்டிங் நாட்களை என்னால் மறக்கவே முடியாது (அவ்வளவு அணலோ!) படம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. ரசிகர்கள் என்ஜாய் பண்ணிப் பார்ப்பார்கள் என்று முடித்து மூச்சு விட்டார் மேனகை (நாமெல்லாம் பெருமூச்சுத்தாம்பா விட முடியும்!).

படத்தின் இயக்குநர் ஏ.எல்.ராஜாவிடம் போய் மேனகை என்று ஒரு வார்த்தையை மட்டும் கேட்டால் போதும் மனிதர் அப்படியே அணல் பறக்க மேனகையை புகழ்ந்து தள்ளி புளகாங்கிதம் அடைந்து விடுகிறார்.

படம் முழுக்க அவரது ஒத்துழைப்பை மறக்கவே முடியாது சார் (ஓ.கே., ஓ.கே!). தன்னால் முடிந்தவரை சிறப்பாக கோ ஆபரேட் செய்தார். இந்தப் படம் எங்களுக்கு எப்படியோ, அவருக்கு சிறந்த எதிர்காலத்தைக் கொடுக்கும் (கூல்டவுண், கூல் டவுண்!) என்று எப்.எம். ரேடியோ போல நிற்காமல் பேசித் தள்ளி விட்டார்.

படத்தோடு ஹீரோ ஜெய்வர்மா. இவர் வேறு யாருமல்ல, முன்னாள் நடிகை டிஸ்ேகா சாந்தியின் தம்பி, பிரகாஷ் ராஜின் மச்சான். அழகிய தீயே, நாம், ஒரு கல்லூரியின் கதை என சில படங்களில் குட்டி குட்டி ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் நாயகனாகியுள்ளார்.

வடிவேலுவின் காமடி படு ரவுசாக வந்திருக்கிறதாம். வடிவேலுவை நம்பித்தான் படத்தையே எடுத்தாராம் தயாரிப்பாளர். பழம்பெரும் நடிகை பானுப்பிரியாவும் படத்தில் தலை காட்டியிருக்கிறார். எஸ்.எஸ்.ஆரும் கூட இருக்கிறாராம்.

கொத்துப் புரோட்டா பாடல்களுக்கு பெயர் போன ஸ்ரீகாந்த் தேவாதான் இப்படத்துக்கு இசை. பாடல்கள் டண்டணக்கா, டணக்கு டக்காவாக, படு பக்காவாக வந்துள்ளதாம்.

மேனகையின் சொக்க வைக்கும் கவர்ச்சி மழையில் நனைந்து தீக்குச்சி பதத்து போகாமல் இருந்தா சரிதான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil