»   »  அடக்கி வாசி, அமுக்கி வாசி!

அடக்கி வாசி, அமுக்கி வாசி!

Subscribe to Oneindia Tamil

காமெடி நடிகர் சிங்கமுத்துவின் தங்க மகன் வாசன் கார்த்திக் ஹீரோவாக அறிமுகமாகும் மாமதுரை படத்தில் அமர்க்களமான குத்துப் பாட்டை அலப்பறையாக ஊட்டி மலைக் காட்டுப் பக்கம் படமாக்கியுள்ளனராம்.

ரொம்ப காலமாக துணை காமெடியனாக கலக்கி வருபவர் சிங்கமுத்து. வடிவேலுவின் செட்டில் நிரந்தர இடம் பிடித்தவர். இயல்பான மதுரை பேச்சில் பேசிக் கலக்கும் சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் ஹீரோவாக அறிமுகமாகிறார். படத்தின் பெயர் மாமதுரை.

வாசனுக்கு ஜோடியாக மிதுனா நடிக்கிறார். இவர் முன்னாள் ஹீரோயின் ராஜ்ஸ்ரீயின் தங்கை தான். ஏற்கனவே சோனா உள்பட பல பெயர்களில் தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் நடித்தாலும் இதுவரை தேறாதவர். இப்போது மிதுனா என்ற பெயரில் வலம் வந்து கொண்டுள்ளார்.

ஜிலுஜிலுவென இருக்கும் மிதுனாவையும், வாசனையும் கூட்டிக் கொண்டு சமீபத்தில் ஊட்டி பக்கம் உள்ள காட்டுக்குப் போய் கலக்கலான குத்துப் பாட்டை அமர்க்களமாக சுட்டுள்ளனர்.

இயற்கை எழில் சூழ்ந்த மலைகளுக்கு நடுவே உள்ள அருவியில் வைத்து இந்த ஜில்லான பட்டை சிலுசிலுவென படமாக்கியுள்ளனர். 40 நடனக் கலைஞர்கள் சுற்றி ஆட, நடுவே மிதுனாவும், வாசனும் நர்த்தனம் புரிய சிறப்பாக வந்துள்ளதாம் பாட்டும், ஆட்டமும்.

ஆட்டத்தை விட பாட்டு வரிகள்தான் படு ஜோர். அடக்கி வாசி, அமுக்கி வாசி, அழகான ராட்சசி என்று ஆரம்பிக்கும் இந்தப் பாட்டுக்கு, டான்ஸ் அமைத்திருப்பவர், ஜெமினி படத்தில் விக்ரம், ராணி ஆகியோரை வைத்து ஓ போடு என்ற தில்லாலங்கடி பாட்டுக்கு டான்ஸ் அமைத்த அதே அசோக்ராஜ்தான்.

மிதுனாவுக்கு டான்ஸ் படு ஜோராக வருகிறதாம். அதை விட ஆட்டமும் படு லாவகமாம். இந்த பாட்டுக்கு கோலிவுட்டில் கோலாகலமான வரவேற்பு கிடைக்கும் என்று மாமதுரை யூனிட் சிலாகிக்கிறது.

பாட்டுக்கு அதி வேக மூவ்மென்ட்ஸ் வைத்து அசத்தியுள்ளாராம் அசோக் ராஜ். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கோட்டை குமார். இவர்தான் படத்தோட வில்லனும் கூட.

வழக்கமாக ஹீரோக்கள் தான் தயாரிப்பாளருக்கு வில்லனா இருப்பாங்க, இந்தப் படத்தில் தயாரிப்பளரே வில்லனாகி விட்டார், சுத்தம்டா சாமீ!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil