»   »  அதே மோகன்..அதே சுபா!

அதே மோகன்..அதே சுபா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அன்று பார்த்த அதே மோகனாக படு ஸ்மார்ட் ஆக காட்சி தருகிறார் நம்முடைய மைக் மோகன். எல்லாம் சுட்ட பழம் படத்திற்காக உடலைக் குறைத்ததால் ஏற்பட்ட பொலிவாம்.

தமிழ் சினிமாவில் மோகனைப் போல உயர்ந்தவர்களும் இல்லை, மறைந்து போனவர்களும் இல்லை. அந்த அளவுக்கு பீக்கின் உச்சகட்டத்தில் இருந்தவர் மோகன். அதே வேகத்தில் மார்க்கெட் போய் சுத்தமாக ஆளையே காணோமே என்று கேட்க வைத்தவரும் மோகன். மைக்கும், கையுமாக பல படங்களில் பாடித் திரிந்தவர் மோகன்.

பெரும் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மோகன் நடிக்க வருகிறார். இம்முறை அவர் நடிக்கப் போவது இயக்குநர் ஜி.கே.யின் சுட்ட பழம் படத்தில். ஜி.கே. ஏற்கனவே பெருசு என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர்.

சுட்ட பழம் படத்தின் கதையை ரெடி செய்த ஜி.கே. ஹீரோவாக மோகனால் மட்டுமே இதில் நடிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார். இதையடுத்து மோகனைத் தேடிப் போனார்.

ஆனால் ஜி.கே.யிடம், நான் நடிப்பதாகவே இல்லையே, சினிமாவை விட்டே நான் ஒதுங்கியிருக்கிறேன் என்று கூறியுள்ளார் மோகன். ஆனாலும் விடாத ஜி.கே. முதலில் நான் கதையைச் சொல்கிறேன், பிறகு நீங்கள் முடிவைச் சொல்லுங்கள் என்று கூறி கதையைக் கூறியுள்ளார்.

கதையைக் கேட்கக் கேட்க மோகனுக்கு ஜாலியாகி விட்டதாம். அடடா... என்று ஆச்சரியம் காட்டியவர், எப்ப ஷூட்டிங் வச்சுக்கலாம் என்று கேட்டு ஜி.கே.வுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தாராம்.

அத்தோடு நில்லாமல் தனது கேரக்டருக்கு அழகூட்டுவதற்காக கடுமையான உடற் பயிற்சிகள் செய்து உடல் எடையை வெகுவாகக் குறைத்து ஸ்லிம் ஆகி விட்டாராம்.

படு ஸ்மார்ட் ஆக வந்து நின்ற மோகனைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போன ஜி.கேயும், பட யூனிட்டாரும் அவரது தொழில் பக்தியை பாராட்டியுள்ளனர்.

சுட்டபழத்தில் மோகனுக்கு ஜோடியாக நடிப்பது சுபா புஞ்சா. மச்சி படத்திற்கு அச்சச்சோ என்று வருத்தப்படும் அளவுக்கு அவரது மார்க்கெட் மங்கிக் கிடந்தது. இப்போது மறுபடியும் சுட்ட பழம் மூலம் வாய்ப்பு வந்திருப்பதால் சந்தோஷமாக உள்ளார்.

சுட்டபழத்தில் சுடச் சுட கவர்ச்சி காட்டி அசத்தியுள்ளாராம் சுபா புஞ்சா. அப்படியாவது சான்ஸ் அலை அடிக்கட்டுமே என்ற எண்ணத்தில்தான் கிளாமருக்கு நோ பார்டர் என்று கூறி விட்டாராம் சுபா.

(சுபாவுக்கும் மோகனுக்கும் சொந்த ஊர் ஒன்று தான். கர்நாடகம் தான்)

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil