»   »  படப்பிடிப்பில் குண்டு பாய்ந்து மோகன்லால் காயம்

படப்பிடிப்பில் குண்டு பாய்ந்து மோகன்லால் காயம்

Subscribe to Oneindia Tamil

சென்னையில் நடந்த மலையாளப் படப்பிடிப்பின்போது டம்மி துப்பாக்கி குண்டு நடிகர் மோகன்லாலின் கண் அருகே குண்டு பாயந்தது.

மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லால் தற்போேபாது அலிபாய் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நவ்யா நாயரும், கோபிகாவும் நடிக்கிறார்கள்.

அலிபாய் படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடந்து வருகிறது. பின்னி மில் வளாகத்தில் உள்ள கிட்டங்கியில் ஷூட்டிங் நடைபெறுகிறது. அங்கு மோகன்லாலும், வில்லனும் மோதுவது போன்ற காட்சியைப் படமாக்கினர்.

நேற்று மாலை இந்தப் படப்பிடிப்பு நடந்தது. வில்லனாக நடித்த ஆர்யமான் கையில் டம்மி குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கி கொடுக்கப்பட்டது. ஆர்யமான் சுடும்போது மோகன்லால் குனிந்து கொள்ள வேண்டும்.

எல்லாம் ரெடியான பின்னர் இயக்குநர் ஆக்ஷன் என குரல் கொடுத்தார். அப்போது ஆர்யமான் துப்பாக்கியால் மூன்று முறை சுட்டார். மோகன்லாலும் குனிந்தார். நான்காவது முறையாக ஆர்யமான் சுட்டபோது குறி தவறி மோகன்லாலின் கண் அருகே பாய்ந்தது.

மோகன்லால் வலியால் அலறித் துடித்தார். உடனடியாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. தனியார் மருத்துவமனைக்கு மோகன்லால் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Please Wait while comments are loading...