»   »  புலிமுருகன் படப்பிடிப்புக்கு செல்கையில் விபத்தில் சிக்கிய மோகன்லால்

புலிமுருகன் படப்பிடிப்புக்கு செல்கையில் விபத்தில் சிக்கிய மோகன்லால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: புலிமுருகன் படப்பிடிப்புக்கு சென்றபோது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் காரின் மீது டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

மோகன்லால் தற்போது புலிமுருகன் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். புதன்கிழமை காலை அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள தனது காரில் சென்றார்.

Mohanlal met with an accident in Kerala

அவரது கார் கேரள மாநிலத்தில் உள்ள மலையத்தூரில் சென்று கொண்டிருக்கையில் டிப்பர் லாரி ஒன்று அவரது வாகனத்தின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் மோகன்லால் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் பிழைத்தார்.

மோகன்லால் விபத்தில் சிக்கியது அறிந்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். புலிமுருகன் படத்தை வைசாக் இயக்க கமலினி முகர்ஜி, ஜகபதி பாபு, கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

மோகன்லால் படப்பிடிப்புகளில் கலந்து கொள்கையில் பல முறை விபத்தில் சிக்கியுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு காசனோவா படப்பிடிப்பில் சண்டை காட்சியில் நடிக்கையில் பைக்கில் இருந்து விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Malayalam superstar Mohanlal met with an accident on january 27th while he was on his way to Pulimurugan shoot in Kerala.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil