»   »  விஜய் மாதிரியே அடம்பிடித்த மோகன்லால்

விஜய் மாதிரியே அடம்பிடித்த மோகன்லால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மோகன்லாலால் ஒடியான் படக்குழு உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்திருக்கிறது.

மோகன்லால் பெயரை சொன்னதுமே அவர் பூசினாற் போன்று இருப்பது தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் அவர் ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் ஒடியான் படத்திற்காக தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார்.

தற்போது அவர் பார்க்க தனது மகன் பிரனவுக்கு அண்ணன் போன்று இருக்கிறார்.

ஆறு

ஆறு

ஒடியான் படப்பிடிப்பு கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள தேன்குருஷி ஆற்றுப் பகுதியில் நடைபெற்றது. அங்கு சில ஆபத்தான சண்டை காட்சிகளை படமாக்கினார்கள்.

டூப்

டூப்

ஆழம் அதிகம் உள்ள தேன்குருஷி ஆற்றுக்கடியில் சில காட்சிகளை படமாக்கியுள்ளனர். மோகன்லாலோ டூப் வேண்டாம் என்று கூறிவிட்டு ரிஸ்க் எடுத்து அந்த காட்சிகளில் நடித்துள்ளார்.

காட்சி

காட்சி

மோகன்லால் தேன்குருஷி ஆற்றை கடந்து வந்து தனது எதிரியான பிரகாஷ்ராஜை பழிவாங்கும் காட்சியை படமாக்கியுள்ளனர். மோகன்லால் ஆற்றில் நீந்தி கரை சேரும் வரை படக்குழு டென்ஷனாக இருந்துள்ளது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

டூப் போட மறுத்து மோகன்லால் ஆற்றை நீந்திக் கடந்தது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியும், அதிர்ச்சியும் அடைய வைத்துள்ளது. இந்த படத்தில் நரேன், மஞ்சு வாரியர், சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

English summary
Mohanlal who has lost lot of weight for his upcoming movie Odiyan being directed by Srikumar Menon took risk by doing dangerous stunt scenes without a dupe.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X