»   »  பேரரசுவின் ரச பாட்டு

பேரரசுவின் ரச பாட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஙொக்கா மக்கா ஙொக்கா மக்கா ஙொக்கா மக்காடா
குத்த வச்சா குத்த வச்சா என்ன தப்பாடா
மேல் படிப்பு,
கீழ் படிப்பு,
எல்லாம் படிக்கலாம்,
இவ காலேஜ்ல ......

இப்படி ஒரு கும்தலக்கா, தையத் தக்கா குத்துப் பாட்டு மதுரை வீரன் படத்தில் இடம் பெற்றுள்ளது. சங்க காலப் புலவர்களுக்குப் போட்டியாக, தாய் தமிழுக்கு பெருமை சேர்க்கும் இப்படி ஒரு பாட்டை இயற்றியிருப்பவர் கொங்கா கால புலவர், இயக்குநர் பேரரசு.

இந்த பேரின்பப் பாடலுக்கு சிற்றின்ப ஆட்டம் போட்டிருப்பவர் மும்பை புயல் முமைத் கான். ஜித்தன் ரமேஷ்தான் ஹீரோ. தெலுங்கு வழியாக தமிழுக்கு வந்துள்ள மும்பை பெண் சலோனி தான் ஹீரோயின்.

போதாக்குறைக்கு சுஜாவும் இருக்கிறார். முமைத் போக இவரும் கிளாமர் ஏரியாவை கவனிக்கிறாராம்.

இதில் ரமேசும் முமைத்தும் சேர்ந்து சில்மிஷமாக ஆடியுள்ளனராம் இயக்குநர் பேரரசு எழுதிய பாட்டுக்கு.

யூத், ஜித்தன் ஆகிய படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வதான் படத்தை இயக்கியுள்ளார். ரமேஷின் அப்பா ஆர்.பி.செளத்ரி படத்தை தயாரித்துள்ளார்.

மதுரை வீரன் படத்தின் பாடல் சத்யம் காம்ப்ளக்ஸில் வெளியிடப்பட்டது. 3 பாடல்களைப் போட்டுக் காட்டினர். விஜய் சிடி, கேசட்டுகளை வெளியிட, இயக்குநர்கள் பாக்யராஜ், ராம. நாராயணன் பெற்றுக் கொண்டனர்.

கேசட் ரிலீஸுக்குப் பின்னர் முமைத் கான் போட்டுள்ள இந்தக் குத்துப் பாட்டையும், பேரரசு பேய்த்தனமாக எழுதியுள்ள இந்தப் பாட்டையும் பற்றி எல்லோருமே சிலாகித்துப் பேசினர். ஆனால் பாக்யராஜும், ராம.நாரயாணனும் எதுவும் பேசவில்லை.

முமைத்கானின் ஆட்டமும், அவரது அங்க அசைவுகளும் இதுவரை எந்த நடிகையிடமும் பார்த்ததில்லை என்று பேசியவர்கள் எல்லோருமே ஜொள்ளு விட்டு பாராட்டினர்.

ஆனால் பேரரசுவின் வரிகள்தான் பலான படத்தின் டிரைலர் போல படு பச்சையாக இருக்கிறது.

தமிழ் பட உலகை ஹாலிவுட் ரேஞ்சுக்கு கொண்டு போக ஒரு குரூப் ஷிப்ட் போட்டு வேலை செய்து கொண்டிருக்கிறது. இன்னொரு குரூப்போ, ஆஸ்கர் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறது.

ஆனால் இப்படிப்பட்ட பாடல்களுக்குத்தான் தாம்பாளத்தில் பாக்கு, வெற்றிலை வைத்து வரவேற்பு கொடுக்கிறது குட்டிச் சுவராகிப் போன கோலிவுட்.

இந்த கும்மாங் குத்துப் பாட்டை 30 லட்சம் செலவு செய்து எடுத்தார்களாம். அந்தப் பணத்தை பேசாமல் 100 ஏழைப் பிள்ளைகளின் படிப்புக்கு கொடுத்திருந்தாலும் புண்ணியமாகப் போயிருந்திருக்கும்.

என்னத்தச் சொல்ல, காலக் கொடுமை!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil