»   »  முமைத்கானின் பாடிகார்ட்கள்!

முமைத்கானின் பாடிகார்ட்கள்!

Subscribe to Oneindia Tamil

ரசிகர்களின் இம்சையிலிருந்து தப்பிப்பதற்காக 2 பாதுகாவலர்களுடன் வலம் வருகிறார் கிளாமர் டொர்னடோ முமைத்கான்.

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் முமைத்கான். இதுவரை இல்லாத புரட்சியாக கவர்ச்சி காட்டுவதில் புது இலக்கணமே படைத்தார் முமைத்கான். அவருடைய கவர்ச்சி ஆட்டத்துக்கு பெரும் மவுசு ஏற்பட்டதால் மளமளவென பல குத்துப் பாட்டுக்களில் புக் ஆனார்.

தமிழ் சினிமா மூலம் கிடைத்த புகழ் ஆந்திராவுக்கும் பரவியதில் அங்கும் முமைத் ஆட்டத்தை தங்களது படங்களில் இடம் பெற வைக்கு ஆந்திர தயாரிப்பாளர்கள் தீவிர முனைப்பு காட்டுகின்றனர்.

இதனால் ஆந்திராவிலும் ஹாட் கேக் ஆகி விட்டார் முமைத். அதிலும் ஒரு படத்தில் 2வது நாயகியாக நடிக்கும் அளவுக்கு முமைத்துக்கு செல்வாக்கு எகிறி விட்டது.

இந்த நிலையில் முமைத்கானுடன் இப்போது இரண்டு பயில்வான்கள் கூடவே வருகிறார்கள். யார் இவர்கள், எதற்காக இந்த பாதுகாப்பு என்று முமைத்திடம் கேட்டபோது, சமீபத்தில் ஆந்திர ரசிகர்கள் அநாகரீகமாக நடந்து கொண்டதால்தான் இந்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளேன்.

சில நாட்களுக்கு முன்பு நான் ஹைதராபாத்தில் இருந்தேன். அப்போது ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது சில ரசிகர்கள் அநாகரீகமாக நடந்து கொண்டனர். என்னைப் பற்றி அசிங்கமாக கமெண்ட் அடித்தனர். மேலும் சிலர் என்னிடம் தவறாகவும் நடக்க முயன்றனர்.

நல்லவேளையாக அவர்களிடமிருந்து தப்பி வந்து விட்டேன். இதையடுத்தே பாதுகாப்புக்கு ஆட்களை நியமிக்க தீர்மானித்தேன்.

குத்துப் பாட்டுக்கு ஆடுபவர்கள் என்றால் எப்படி வேண்டுமானாலும் நினைத்து விடுவதா?. இந்த சம்பவம் என்னை வேதனைப்படுத்தி விட்டது. நானும் ஒரு பெண். தமிழகத்தைச் சேர்ந்த நல்ல குடும்பத்திலிருந்துதான் நானும் வந்துள்ளேன். தமிழகத்தில் ஒருபோதும் எனக்கு இப்படி ஒரு மோசமான சம்பவம் நடந்ததில்லை என்றார் வருத்தத்துடன்.

அவர் பாட்டுக்கு ஆடிக் கொண்டிருக்கிறார், ஏம்பா வம்புழுக்கிறீங்க?

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil