»   »  ராக்கி போய் முமைத்!

ராக்கி போய் முமைத்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொல்லாதவன் படத்தில் குத்துப் பாட்டுக்கு ஆட்டமாட ராக்கி சாவந்த் குண்டக்க மண்டக்க சம்பளம் கேட்டதால் அவரை ரிஜக்ட் செய்து விட்டு, முமைத்கானை புக் பண்ணி விட்டனராம்.

யாரடி நீ மோகினியைத் தொடர்ந்து தனுஷ் நடித்து வரும் படம் பொல்லாதவன். மாமனார் ரஜினிகாந்த் ரொம்ப காலத்திற்கு முன்பு நடித்து சூப்பர்ஹிட் ஆன படத்தின் டைட்டில். ஆனால் கதை வேறயாம்.

பெரும் பொருட் செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகின்றனர். இந்தப் படத்தில் ஒரு ஜாலியான ராக் சாங் இடம் பெற்றுள்ளது.

இந்தப் பாட்டில் கும்மான சுந்தரியாக ஆட்டமாட, முதலில் ராக்கி சாவந்த்தை அணுகினர். ஆனால் 20 லட்சம் தந்தால் ஆடிக் கொடுக்கிறேன் என்று பந்தாவாக கூறியுள்ளார்.

அம்மாடியோவ் என்று அரண்டு போன படக் குழுவினர் யாரைப் போடலாம் என யோசித்துள்ளது. சேதியைக் கேள்விப்பட்ட முமைத்தான் வலியக்க இயக்குநரை அணுகி, என்னை விட்டு விட்டு அங்க போய் கேட்கலாமா என்று செல்லமாக கோபித்துக் கொண்டுள்ளார்.

அடடா, வெண்ணை இங்கிருக்க எங்கெங்கோ போய் அலைஞ்சிருக்கோமே என்று தயாரிப்பாளர், இப்போது ராக்கி இடத்தில் முமைத்கானை போட்டுள்ளார். மிகவும் சகாய சம்பளத்திற்கு இந்தப் பாட்டுக்கு ஆடிக் கொடுத்திருக்கிறாராம் முமைத்.

படத்தின் களேபரமான பாடல் காட்சியாக இது அமையும் என்கிறார்கள். அந்த அளவும், செலவும், முமைத்கானின் செழுமையும் வெளுத்துக் கட்டியுள்ளதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil