»   »  கேரக்டர் முமைத்!!!

கேரக்டர் முமைத்!!!

Subscribe to Oneindia Tamil

இதுவரை குத்துப் பாட்டுக்களின் மூலமே தமிழ் ரசிகர்களை மகிழ்வித்த மும்பைக்கார முமைத் கான், முதல் முறையாக முழு நீள கேரக்டர் ரோலில் தோன்றி ரசிகர்களை குளிர்விக்க வருகிறார்.

மும்பையிலிருந்து எத்தனையோ குத்துப் பாட்டு நாயகிகளில் கோலிவுட்டில் வெற்றிக் கொடி நாட்டியுள்ளனர். கடைசியாக வந்தவர் ரகஸ்யா, லேட்டஸ்டாக வந்தவர் முமைத்கான்.

முமைத்கானின் வரைமுறையில்லாத கிளாமர் ஆட்டத்தால் கவரப்பட்ட பல தயாரிப்பாளர்கள், ஹீரோ, ஹீரோயினுக்கு அடுத்து முமைத்கானின் கால்ஷீட்டையும் வாங்கிக் கொள்வது வழக்கமாகி விட்டது.

குத்துப் பாட்டுக்களில் மட்டுமே ஆடி வந்த முமைத்கான் முதல் முறையாக ஒரு படத்தில் படம் முழுக்க வரும் வகையிலான கேரக்டரில் நடித்தும் அசத்தியுள்ளார். ஆனால் இங்கல்ல தெலுங்கில்.

இதுதாண்டா போலீஸ், எவனா இருந்தா எனக்கென்ன என்ற ரீதியில் அடா, புடா ரேஞ்சுக்கு டைட்டில் வைப்பதற்குப் பெயர் போன டாக்டர் ராஜசேகரின் மனைவியான நடிகை ஜீவிதா தெலுங்கில் இப்போது டைரக்டர் ஆகியுள்ளார்.

சேஷு என்ற படத்தை முதலில் இயக்கிய அவர் தற்போது கணவர் ராஜசேகரை வைத்துப் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். தெலுங்கில் ஹிட் படமான இதை தற்போது தமிழில் டப் செய்து வெளியிடுகிறார் ராஜசேகர்.

இந்தப் படத்தின் தமிழ் பதிப்புக்கு உடம்பு எப்படி இருக்கு என்று சூப்பராக பெயரிட்டுள்ளார் ராஜசேகர். ராஜசேகருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் ஷம்ருத்தா. உயிர் படத்தில் ஸ்ரீகாந்த்தின் ஜோடியாக நடித்த அதே ஷம்ருத்தாதான்.

ரகுவரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கலாபவன் மணி, கோட்டா ஸ்ரீனிவாசராவ் ஆகியோரும் படத்தில் உள்ளனர். படத்தின் விசேஷமே முமைத்கான்தான்.

இதுவரை குத்துப் பாட்டுக்கு மட்டும் ஆடி வந்த முமைத்கானுக்கு இதில் கிளாமர் கலந்த நடிப்புப் பாத்திரம் கொடுத்துள்ளார் ஜீவிதா. சும்மா சொல்லக் கூடாது, முமைத்கானும் அசத்தலாக கலக்கியுள்ளாராம்.

வெறுமனே ஆடி வந்த முமைத்கானை நடிகையாக பார்ப்பது ரசிகர்களுக்கு படு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். இதைச் சொல்லியே படத்துக்கு விளம்பரம் தேடவும் ராஜசேகர் அண்ட் கோ முடிவு செய்துள்ளதாம்.

ஆட்டத்தில் கலக்கிய முமைத், நடிப்பில் என்ன செய்திருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil