»   »  ஜிக் ஜிக் மும்தாஜின் திக் திக்!

ஜிக் ஜிக் மும்தாஜின் திக் திக்!

Subscribe to Oneindia Tamil

திக் திக் படத்தின் மூலம் ரசிகர்களை தனது கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வர படு மும்முரமாக இருக்கிறார் மும்தாஜ்.

டி.ராஜேந்தரின் முரட்டுக் கரத்தால் சினிமாவுக்குக் கொண்டு வரப்பட்டவர் மும்தாஜ். ராஜேந்தரின் அறிமுகங்கள் சோடை போனதில்லை. நளினி, அமலா என அது ஒரு பெரிய வரிசை. அந்த வரிசையில், மும்தாஜும் ஆணித்தரமாக இடம் பிடித்தவர்.

நாயகியாக அறிமுகமாகி பின்னர் குத்துப் பாட்டுக்குள் புகுந்து ரசிகர்களின் நெஞ்சங்களில் கும்மாளமிட்டவர் மும்தாஜ். முன்னணி நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் மும்தாஜின் ஆட்டமும், பாட்டமும் படு அமர்க்களமாக இருந்தது. அது ஒரு காலம்.

செக்ஸி ரோல்களிலேயே நடித்து நடித்து ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டார் மும்தாஜ். இந்த நிலையில்தான் வீராசாமி மூலம் மீண்டும் பிரேக் கொடுத்தார் ராஜேந்தர்.

தற்போது மும்தாஜ் வசம் பெரிய பட வாய்ப்புகள் எதுவும் இல்லாவிட்டாலும் கூட திக் திக் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் மும்தாஜ். இப்படத்தைத்தான் பெரிதும் நம்பியுள்ளார் மும்தாஜ்.

இதில் காதல் படத்தில் சந்தியாவுக்கு தோழியாக வந்த சரண்யாதான் நாயகி. இருந்தாலும் மும்தாஜுக்கு முக்கியமான ரோல் கொடுத்துள்ளனராம். கலாபக் காதலன் படத்தை இயக்கிய இகோர்தான் இப்படத்தை இயக்கவுள்ளார்.

திக் திக் மூலம் ரசிகர்களின் மனதில் மீண்டும் ஜிக் ஜிக் என குடியேறி விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளார் மும்தாஜ். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, இது சற்று வித்தியாசமான படம். வழக்கமான கதையோட்டத்துடன் இல்லாமல் வேறு மாதிரியாக திரைக்கதை அமைத்துள்ளனர்.

வீராசாமிக்குப் பிறகு நல்ல பட வாய்ப்புக்காக காத்திருந்தேன். அப்போதுதான் திக் திக் பட வாய்ப்பு வந்தது. இதில் சரண்யாதான் ஹீரோயின் என்றாலும் கூட அவருடன் இணைந்து எனக்கும் நல்ல வாய்ப்புகள் உள்ளன என்றார்.

இகோர் கூறுகையில், படத்தில் மும்தாஜுக்கு ஒரு அருமையான பாட்டு உள்ளது. இதில் படு கிளாமராக அவர் தோன்றுகிறார். இந்தப் பாடலை ஏவி.எம்.ஸ்டுடியோவில் வைத்துப் படமாக்கியுள்ளோம். பெரிய ஒயின் பாட்டிலை தனது நெஞ்சத்தின் மீது வைத்துக் கொண்டு படு அமர்க்களமாக ஆடியுள்ளார் மும்தாஜ்.

அவரது ரசிகர்களுக்கு இந்தப் பாட்டும், மும்தாஜின் கவர்ச்சி ஆட்டமும் பெரும் விருந்தாக அமையும் என்றார்.

இகோர் சொல்வதைப் பார்த்தால் விட்டதைப் பிடித்து விடுவார் மும்தாஜ் என்றே தோன்றுகிறது.

ஏற்கனவே கலாபக் காதலனில் ஹீரோயின் ரேணுகா மேனனை விட, அக்கா புருஷனை மயக்கும் கேரக்டரில் நடித்த அட்சயாதான் அதிகம் பேசப்பட்டார். எனவே திக் திக், மும்தாஜுக்கு பிரேக் கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil