»   »  ஒளவையார் வேடத்தில் மும்தாஜ்

ஒளவையார் வேடத்தில் மும்தாஜ்

Subscribe to Oneindia Tamil

ஒளவையார் வேடத்தில் மும்தாஜ் நடிக்கப் போகிறார். இந்த கூத்து நடப்பது மகாநடிகன் படத்தில்.

மகாநடிகன் படத்தில் முழுக்க முழுக்க தமிழ் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதத்தில் பல கேரக்டர்களை வைத்துஅமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள். பல்லு போன பிறகு பட்டாணி கடிக்கும் ஆள் நம்ம சத்யராஜ்தான்.

பிரபு, கார்த்திக் எல்லாம் பீல்ட் அவுட்டாகி விட, இவர் மட்டும் ஜமாய்க்கிறார். மகா நடிகன், சுயேட்சை எம்.எல்.ஏ.,அய்யர் ஐ.பி.எஸ்., பெருமாள்சாமி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சம்பளம் ரூ. 15 லட்சம் தந்தால் போதும்,முடியலையா ரூ. 5 லட்சம் குடுப்பா போதும் என்று வாங்கிப் போட்டுக் கொண்டு வரிசையாக பல படங்களில்நடித்து வருகிறார்.

இதில் பெருமாள்சாமி படத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றுபவராக நடிக்கிறார். இதற்காக கொல்கத்தா சென்று,சமீபத்தில் தனஞ்செய் என்பவனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிய மாலிக்கைப் பார்த்து அவரது நடை, உடைபாவனைகளை ஸ்டடி செய்யவிருக்கிறார்.

மகா நடிகன் படத்தில் துணை நடிகராக இருந்து முன்னணி நடிகராகிற கேரக்டரில் சத்யராஜ் நடிக்கிறார். இந்தப்படத்தில் தமிழகத்தின் அத்தனை அரசியல்வாதிகளையும், நாற்காலி கனவு வைத்திருக்கும் நடிகர்களையும் அக்குவேறு ஆணி வேராக குண்டக்க மண்டக்க விமர்சனம் செய்து தாளித்துள்ளாராம் சத்யராஜ்.

இப் படத்தில் முதல்வர் வேடத்தில் மல்லிகா நடிக்கிறார். கவர்ச்சிக்காக நமீதாவை படத்தில் சேர்த்துள்ளார்கள்.அவரும் இயக்குநரின் தேவையை உணர்ந்து சிக்கனமான உடைகளில் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் மும்தாஜும் இருக்கிறார். மும்தாஜ் இதில் நடிகையாகவே வருகிறாராம். கவர்ச்சி மட்டும் காட்டாமல்ரசிகர்களைக் கதி கலங்க வைக்கும் வகையில் ஒளவையார் வேடத்திலும் ஒரு காட்சியில் வந்து அசத்தியுள்ளாராம்.

ஒளவையார் என்றால் கே.பி.சுந்தராம்பாள் ஞாபகம்தான் நமக்கு இத்தனை நாட்களாக நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. இனிமேல் மும்தாஜும் ஒரு ஓரமாக வந்து நம்மை வாட்டப் போகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil