பிசாசு 2 ஷுட்டிங்கை முடித்த மிஷ்கின் ... அடுத்த திகில் அப்டேட் எப்போ
சென்னை : திகில் நிறைந்த பேய் படமாக எடுக்கப்பட்ட பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் அடுத்த பாகம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. டைரக்டர் மிஷ்கின் கடந்த சில மாதங்களாகவே பிசாசு 2 ஷுட்டிங்கில் தான் பிஸியாக இருந்து வருகிறார்.

ஆண்டிரியா லீட் ரோலில் நடிக்கும் பிசாசு 2 படத்தின் ஷுட்டிங் கடந்த ஆண்டு டிசம்பரில் துவங்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆண்டிரியா ஷுட்டிங்கில் கலந்து கொண்டு வருகிறார். ஆனால், லாக்டவுன் காரணமாக படத்தின் வேலைகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
அதற்கு பிறகு அரசு அனுமதி அளித்ததை அடுத்து, ஜுலை மாத துவக்கத்தில் பிசாசு 2 படத்தின் ஷுட்டிங் மீண்டும் துவங்கப்பட்டது. லேட்டஸ்ட் தகவலாக இந்த படத்தின் ஷுட்டிங் முழுவதும் முடிக்கப்பட்டு விட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டு விட்டது. விரைவில் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முடிக்கப்பட்டு, படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட உள்ளதாம்.
சாலையே இல்லாத அடர்ந்த காட்டிற்குள் சென்று தான் இந்த படத்தின் பெரும்பாலான பகுதிகள் படமாக்கப்பட்டதாம். இந்த படத்தில் நடிகை பூர்ணா மிக முக்கியமான ரோலில் நடித்துள்ளாராம். இவருடன் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப், நவம்பர் ஸ்டோரி படத்தில் நடித்த நமிதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் தங்களின் சோஷியல் மீடியா பக்கத்தில் படத்தின் ஷுட்டிங் நேற்று நிறைவு பெற்றுவிட்டதை தெரிவித்துள்ளனர். அத்துடன் படத்தில் நடிக்கும் மற்ற சில நடிகர்களுடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர். இந்த படத்தை டி.முருகானந்தத்தின் ராக்ஃபோர்ட் என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ளது. கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் அனைவரையும் மிகவும் கவர்ந்தது. பெண் ஒருவர் கையில் சிகரெட்டுடன், கால்கள் மட்டும் வெளியே தெரிய பாத்டப்பில் படுத்திருப்பது போன்று அந்த ஃபஸ்ட்லுக் அமைக்கப்பட்டிருந்தது.
அதற்கு முன் தனது பாட்டியின் ஃபோட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஆண்டிரியா, அதே கெட்டப்பில், அதே போல் போஸ் கொடுத்த தனது ஃபோட்டோவையும் பகிர்ந்தார். இந்த ஃபோட்டோவை அப்படியே படத்திற்காகவும் பயன்படுத்திக் கொண்டனர்.
இந்த படத்தில் ஒரு காட்சியில் ஆண்டிரியா நிர்வாணமாக நடித்துள்ளதாக படம் துவங்கிய சில நாட்களிலேயே அறிவித்து பரபரப்பை கிளப்பினர். ஆடை படத்தில் அமலா பால் நடித்ததை போல், இந்த படத்தின் கதைக்கு தேவைப்பட்டதால் ஆண்டிரியாவும் நிர்வாணமாக நடித்தாராம்.


Click it and Unblock the Notifications











