»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சங்கத் தலைவர் விஜய்காந்துடன் நடித்து வரும் படத்தில், நமீதா தந்து வரும் ஒத்துழைப்பு குறித்து அறிந்தசங்கத்தின் செயலாளர் சரத்குமாரும் தனது அடுத்த படத்தில் அவரையே ஹீரோயினாகப் போடுமாறுசொல்லிவிட்டாராம்.

மலையாளத்தில் கிரானிக் பேச்சிலர் படத்தை டைரக்ட் செய்த சித்திக் அதை தமிழிலும் இயக்கி வருவதும் அதைவிஜய்காந்தே தயாரித்து, நடிப்பதும் தெரியும். இந்தப் படத்துக்கு முதலில் பிரம்மச்சாரி என்று பெயர்வைத்தார்கள்.

ஆனால், சமீப காலமாக விஜய்காந்தை அரசியல் மீண்டும் போட்டு வாட்டுவதால், படத்துக்கு அண்ணா என்றநாமகரணம் சூட்டினார்கள். இதற்கு திமுக, மதிமுக, அதிமுகவிடம் இருந்து எதிர்ப்பு வரலாம் என்று தகவல்கள்வந்ததால் எங்கள் அண்ணா என்று பெயர் மாற்றிவிட்டார்கள்.

இந்தப் படத்தில் விஜய்காந்துக்கு ஜோடியாக ஆந்திரா தக்காளி நமிதா நடிக்கிறார். நன்றாகவேஒத்துழைக்கிறாராம்.


கேரளாவில் நடந்த சூட்டிங்கில் கவர்ச்சி உடைகளை அணிந்து நமீதா போட்ட டான்ஸை பார்க்க பெரும் கூட்டம்கூடிவிட்டதாம்.

நமிதாவின் இந்த தைரியக் கவர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு குறித்து அறிந்த சரத்குமார் தனது ஏய் படத்தில்அவரையே புக் பண்ண சொல்லிவிட்டாராம்.

ஜெமினி தெலுங்குப் பதிப்பில் கவர்ச்சி காட்டி அசத்திய நமீதாவுக்கு அங்கும் நல்ல வரவேற்பாம். ஆனாலும்தமிழில் நடிப்பதையே விரும்புகிறார். அவரது விருப்பத்தைப் போலவே மேலும் சில தமிழ் தயாரிப்பாளர்களும்நமீதாவை அணுகி பேசிவிட்டுப் போயிருக்கிறார்கள். அதிர்ஷ்டம் தான்.

விஜய்காந்தையடுத்து, சரத்குமாருக்கு ஜோடி சேரும் நமீதாவுக்கு ரொம்பவே தைரியமாம். மூத்த நடிகர்களுடன்அடுத்தடுத்து ஜோடி சேர்ந்தால், மூத்த நடிகை முத்திரை குத்தி இளைய நடிகர்கள் சீண்ட மாட்டார்கள் என பலரும்எச்சரித்தார்களாம்.

ஆனால், அதையும் தான் பார்ப்போம் என்று சொல்லி ஏய் படத் தயாரிப்பாளரிடம் அட்வான்ஸை வாங்கிப்போட்டுக் கொண்டாராம் நமிதா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil