»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil
விஜய்காந்த் நடித்து வரும் கிரானிக் பேச்சிலர் படத்தில் அவருக்கு ஜோடியாக ஆந்திராவில் இருந்து நமிதாவைஇழுத்து வந்திருக்கிறார்கள்.

இயக்குவது மலையாள இயக்குனர் சித்திக். இவர் தனது படங்களுக்கு ஆஙகிலத்தில் பெயர் வைப்பதில் வல்லவர்.ஆனால், மூச்சுக்கு மூச்சு தமிழ் பற்று பேசும் விஜய்காந்த் இந்தப் படத்தின் தலைப்பை மாற்றச் சொல்லிவிட்டதாய்சொல்கிறார்கள்.

பெரும்பாலும் பிரம்மச்சாரி என்ற பெயரில் இந்தப் படம் வெளியாகலாம்.

இதில் விஜய்காந்துக்கு ஜோடியாக பல மூத்த நடிகைகளை யோசித்துப் பார்த்துவிட்டு, பின்னர் மிக இளம்நடிகைகளை அணுகிப் பார்த்துவிட்டு, எதுவும் சரிப் படாமல் போனதால் ஹைதராபாத்துக்குப் போய் நமிதாவைபுக் செய்துவிட்டு வந்திருக்கிறார்கள்.

தெலுங்கில் இவர் நடித்த அனைத்துப் படங்களுமே படு தோல்வியடைந்துள்ளன. இதனால் ராசியில்லாதவர் எனமுத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் இவரோடு ஜோடி சேர்கிறார் விஜய்காந்த். விஜய்காந்த்துக்கும் சமீபத்தில் தொடர் தோல்விகள்.இதனால் இந்தப் படத்தைத் தான் பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார்.

நமிதாவின் உயரம் 5 அடி 8 அங்குலம். விஜய்காந்துக்கு இணையான உயரம் என்பதால் விஜய்காந்துக்குஹைஹீல்ஸ் போட்டுவிட்டால் தான் சரி வருமாம். ஒரு படம் எடுப்பதில் தான் எத்தான சிக்கல்கள்....

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil