»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

சேது புகழ் பாலாவின் இயக்கத்தில் தயாராகும் நந்தா, சூர்யாவுக்கு மிகப் பெரிய பிரேக் தரும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர்கள் இணைந்து தயாரிக்கும் நந்தா படத்தை மிக வித்தியாசமாகஇயக்கி வருகிறார் இயக்குனர் பாலா.

சேது படத்தின் மூலம் நம்மை தன் பக்கமாக திரும்பச் செய்த இந்த மதுரை மனிதர் நந்தா மூலம், சூர்யாவுக்கு மிகப்பெரிய பிரேக் ஏற்படுத்தித் தரப் போகிறார் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

கல்லூரி கேம்பசில் நடக்கும் வன்முறையுடன் கூடிய காதல் கதை தான் நந்தா. இதுவரை ஜோதிகாவுடன் சேர்ந்துபூக்களையும் காதலையும் மட்டுமே சுமந்து வந்த சூர்யாவை அடி-தடி ஹீரோவாக்கியிருக்கிறார் டைரக்டர் பாலா.

சேது படத்துக்காக அழகிய ஹீரோக்களில் ஒருவரான விக்ரமை மொட்டையடித்து, கருப்பு வண்ணம் பூசி நடிப்பில்அவரை மிளிர வைத்தவர் பாலா. சூர்யாவையும் விடவில்லை. முடியை ஒட்ட வெட்டிவிட்டு, முகத்தில் தழும்புகள்தந்து முரட்டு சூர்யாவாக்கியிருக்கிறார்.

சமீபத்தில் தான் இந்தப் படத்தின் 20 நாள் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடந்து முடிந்திருக்கிறது. கணேஷ் ரகு,கார்த்திக் ராதா கிருஷ்ணன், வெங்கி நாராயணன், ராஜன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத்தயாரிக்கின்றனர். நால்வருமே அமெரிக்காவில் வசித்து வருபவர்கள். அங்கு சாப்ட்வேர் நிறுவனம் நடத்திவருபவர்கள்.

படத்தக்கு ஒளிப்பதிவு ரத்தினவேலு என்ற ராண்டி. கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்கள் மிக நன்றாகவந்துள்ளன. பாலாவை திருப்தியடைய வைப்பது மிக கஷ்டம் என்கிறார் கார்த்திக். அந்த அளவுக்கு அவரிடம்வேலை வாங்கியிருக்கிறார்.

சூர்யாவுக்கு ஜோடியாக சின்னப் பொன்னு லைலா நடிக்கிறார். சும்மா பொம்மை மாதிரி வந்துவிட்டுப் போகாமல்நடிப்பிலும் கவனம் செலுத்தியிருக்கிறார் லைலா.

முன்னாள் இயக்குனரும் நடிகருமான ராஜ்கிரணுக்கும் வெயிட்டான ரோல் கொடுத்திருக்கிறார் பாலா.

...மேலும் படங்கள்
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil